கிழக்கு முதலமைச்சருக்கு பாதுகாப்பு அமைச்சு ‘ஆப்பு’

🕔 May 26, 2016

Ministry of Dedence - 04கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் கலந்து கொள்ளும் நிகழ்வுகளில், முப்படையினர் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அதேவேளை, கிழக்கு மாகாண முதலமைச்சர் கலந்து கொள்ளும் நிகழ்வுகளில் முப்படையினர் கலந்து கொள்ள மாட்டார்கள் என்றும் பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது.

சம்பூர் மகா வித்தியாலயத்தில் கடந்த 20 ஆம் திகதி நடைபெற்ற நிகழ்வொன்றில், கடற்படை அதிகாரி ஒருவரை, கிழக்கு மாகாண அமைச்சர் மிகவும் மோசமாகவும், அநாகரீகமாகவும் திட்டியிருந்தார்.

கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெனாண்டோ, இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கெஷாப் உள்ளிட்ட பல பிரமுகர்கள் முன்னிலையில், கிழக்கு மாகாண முதலமைச்சர் இவ்வாறு நடந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்