தாஜுதீன் கொலை தொடர்பில், பொலிஸ் பொறுப்பதிகாரியொருவர் நீதிமன்றில் ரகசிய வாக்குமூலம்

🕔 May 24, 2016

Thajudeen - 865சீம் தாஜுதீன் கொலை விவகாரம் தொடர்பில் பொலிஸ் பொறுப்பதிகாரி ஒருவர் நீதவானிடம் ரகசிய வாக்கு மூலம் ஒன்றை வழங்கியுள்ளார்.

நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி, வெல்லால ஆராச்சிகே சரத்சந்திர என்பவரே இவ்வாறு வாக்குமூலம் அளித்துள்ளார்.

கொழும்பு மேலதிக நீதவான் நிசாந்த பீரிஸ் முன்னிலையில் நேற்று திங்கட்கிழமை இந்த வாக்கு மூலத்தை வழங்கினார்.

மேற்படி நபர் – தற்போது பாணந்துறை பொலிஸ் நிலைய மோட்டார் போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரியாக தற்போது கடமையாற்றி வருகின்றார்.

ஏற்கனவே பல சந்தர்ப்பங்களில் சரத்சந்திரவை அழைத்து, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வாக்கு மூலங்களை பதிவு செய்திருந்தனர்.

இது குறித்த மேலதிக அறிக்கைகளை புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளனர்.

இந்த விசாரணைகளுக்கு சரத்சந்திர எவ்வித ஒத்ழைப்புக்களையும் வழங்கவில்லை என புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

எனினும், உயர் அதிகாரிகளின் அழுத்தங்கள் காரணமாக – போலி அறிக்கை ஒன்றை சமர்ப்பித்ததாக, சரத்சந்திர வாக்கு மூலத்தில் கூறியுள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்