வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான, மு.காங்கிரசின் இரண்டாம் கட்டப் பணி நாளை ஆரம்பம்

🕔 May 24, 2016

 

SLMC - 098யற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் வகையிலான இரண்டாம் கட்டப் பணியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – நாளை புதன்கிழமை முதல் ஈடுபடவுள்ளது.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் மேற்கொள்ளப்படவுள்ள இரண்டாம் கட்ட நடவடிக்கை சம்மந்தமான கலந்துரையாடல், கட்சியின் தலைவர் அமைச்சர் ரஊப் ஹக்கீம் தலைமையில் – நேற்று திங்கட்கிழமை கட்சியின் தலைமை காரியாலயம் தாருஸ்ஸலாமில் நடைபெற்றது.

பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் பொருட்டு, முஸ்லிம் காங்கிரசினால் நியமிக்கபப்டுள்ள விசேட குழுவினர், மேற்படி கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.

இதேவேளை, 02ஆம் கட்ட நடவடிக்கையாக – பாதிக்கப்பட்ட வீடுகளை துப்புரவு செய்தல் மற்றும் அவற்றை புனர் நிர்மாணித்தல் ஆகிய பணிகள் நடைபெறவுள்ளன.

இதற்காக கட்சியின் இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள், மேசன்மார்கள், தச்சர்கள், எலெக்டிசியன்கள் மற்றும் பிளம்பர்கள் ஆகியோரை உள்ளடக்கிய குழுவினர் நாளை புதன்கிழமை முதல் – பணியில் ஈடுபடவுள்ளனர்.

பாதிக்கபப்டுள்ள சகோதரர்கள் கீழ்வரும் இலங்களுடன் தொடர்புகொண்டு, கட்சியின் இரண்டாம் கட்ட சேவையைப்பெற்றுக்கொள்ள முடியும்.

  • ரியாஸ் கபுா் – 0777 21 9192  
  • இஸ்மத் – 077 6309370  
  • அர்ஷாத் நிஸாம்தீன் 0777 221010

Comments

புதிது பேஸ்புக் பக்கம்