மறைந்தும் மறையாத மசூர் சின்னலெப்பை

🕔 May 24, 2016

Mashoor Sinnalebbe - 087– முஹம்மட் –

(கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் மர்ஹும் மசூர் சின்னலெப்பையின் நான்காவது ஆண்டு நினைவு தினம் 22 மே 2016 அன்றாகும்)

கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் மசூர் சின்னலெப்பை வபாத்தாகி நான்கு வருடங்கள் நிறைவடைந்துள்ளன.

உடலால் அன்னார் மறைந்து விட்டபோதும், அவருடைய நல்ல குணத்தாலும் நற் செயல்களாலும் மக்கள் மனதில் அவர் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

அரசியலுக்குள் நுழைவதற்கு முன்பாகவே சேவை செய்வதிலும், ஏழைகளுக்கு உதவி புரிவதிலும் – மர்ஹும் மசூர் சின்னலெப்பை சிறப்பாகச் செயற்பட்டு வந்த ஒருவராவார்.

அவருக்கு அரசியல் அதிகாரம் கிடைத்தவுடன் – மக்களுக்கு மேலும் மேலும் சேவை செய்யத் தொடங்கினார்.

எப்போதும் கலகலப்பாகவும், சிரித்த முகத்துடனும் பழகும் அவரின் சுபாவமே, அவரின் முன்னேற்றங்களுக்கும், வெற்றிகளுக்கும் காரணமாகின.

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர், இலங்கை போக்குவரத்து சபையின் கிழக்குப் பிராந்தியத் தலைவர் மற்றும் கிழக்கு மாகாண சபையின் உறுப்பினர் என்று – மர்ஹும் மசூர் சின்னலெப்பை அவர்கள் வகித்த பதவிகள் மூலமாக, பல இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்கியதோடு, பல்வேறு அபிவிருத்திப் பணிகளையும் மேற்கொண்டார்.

அவரால் தொழில் பெற்ற பல இளைஞர்கள் இன்றும் அவரை நினைத்து, அவருக்காக பிரார்த்தனை செய்கின்றார்கள் என்பது, அவரின் சேவைகளுக்குக் கிடைத்த பாக்கியமாகும்.

அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசைக் கட்டிக் காத்து, அந்தக் கட்சியை – மசூர் சின்னலெப்பை அவர்கள், தனது ஆளுமையால் தூக்கி நிறுத்தியிருந்தார். அந்தவகையில், மு.காங்கிரசின் ஆதரவாளர்களிடையே அவருக்கு பெரும் செல்வாக்கு இருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு, அனைத்து வகையிலும் சிறப்பான ஒரு நல்ல மனிதராக வாழ்ந்து மறைந்த மசூர் சின்னலெப்பை அவர்கள் – மறக்க முடியாத ஒரு மனிதர் என்பதில் மாற்றுக் கருத்துக்கள் இல்லை.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறப்பாக அமையவும், அவருக்கு மேலான சுவர்க்கம் கிடைக்கவும் பிரார்த்திப்போம்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்