கிழக்கு முதலமைச்சர் திட்டியமை குறித்து, ஜனாதிபதிக்கு விளக்கமளித்துள்ளேன்: பாதுகாப்பு செயலாளர்

🕔 May 25, 2016

Karunasena hettiarachchi - 099டற்படை அதிகாரி ஒருவரை கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் திட்டி – அதட்டிய சம்பவம் தொடர்பில் ஜனாதிபதிக்கு – தான் விளக்கமளித்துள்ளதாக, பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி இன்று புதன்கிழமை தெரிவித்தார்.

இதேவேளை, இது தொடர்பில் கடற்படைத் தளபதி நேற்றைய தினம் அறிக்கையொன்றினைக் கையளித்ததாகவும் பாதுகாப்பு செயலாளர் ஹெட்டியாராச்சி கூறினார்.

தற்போது ஜனாதிபதி வெளிநாடு சென்றுள்ளதால், அவர் நாடு திரும்பியதும் இவ்விவகாரம் தொடர்பில் தீர்மானமொன்றினை மேற்கொள்வார் என்றும் பாதுகாப்பு செயலாளர் விபரித்தார்.

“இது – அரசியல்வாதி ஒருவர் சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால் என்னால் எதுவித நடவடிக்கையும் எடுக்க முடியாது” எனவும் அவர் கூறினார்.

தொடர்பான செய்தி: கடற்படை அதிகாரியை திட்டிய கிழக்கு மாகாண முதலமைச்சர்; அநாகரீகத்தின் உச்சம் என விமர்சனம்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்