ஹக்கீமுடனான பேச்சுவார்த்தையின் போது, நான் MP பதவி கோரவில்லை; ஹசனலி தெரிவிப்பு

🕔 May 25, 2016

Hasan Ali - 097முஸ்லிம் காங்­கி­ரஸின் தலைவர் ரஊப் ஹக்கீமுக்கும், தனக்குமிடையில் நடை­பெற்ற பேச்­சு­வார்த்­தையின் போது, தான் நாடாளு­மன்ற உறுப்­பினர் பத­வினையோ, அமைச்சுப் பதவினையோ கோரவில்லை என்று அந்தக் கட்சியின் செயலாளர் எம்.ரி. ஹசனலி தெரிவித்துள்ளார்.

மேற்படி விடயங்கள் குறித்து பேசாத நிலையில், சில ஊட­கங்கள் இப்­ப­த­வி­களை தான் கோரி­ய­தாக தவ­றான செய்­தி­களை வெளி­யிட்­டுள்­ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மு.காங்கிரசின் தலைவர் மற்றும் செயலாளருக்கு இடையில் நிலவி வரும் பிரச்சினையைத் தீர்க்கும் பொருட்டு, இருவருக்கும் இடையில் அண்மையில் பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றது.

இது தொடர்பாக ஹசனலி மேலும் கூறுகையில்;

“நாடாளு­மன்ற உறுப்­பினர் பத­வியும் அமைச்சுப் பத­வியும் கட்­சிப்­பி­ரச்­சி­னை­யல்ல. அது தலை­வ­ருக்கும் எனக்­கு­முள்ள பிரச்­சினையாகும். இப்­பி­ரச்­சினைகள் எங்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தையின்போது பேசப்­ப­ட­வில்லை.

செய­லாளர் பதவி பற்­றியே பேசினோம். செய­லா­ளரின் அதி­கா­ரங்கள் பற்றி பேசினோம். தலைவரினால் இடை­நி­றுத்தி வைக்­கப்­பட்­டுள்ள இரண்டு மெள­ல­விகளையும், மீண்டும் கட்சியின் உயர்­பீ­டத்தில் இணைத்துக் கொள்வதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்­ளது.

பேச்­சு­வார்த்­தைகள் முற்­றாக முடி­ய­வில்லை. பிரச்சினையைத் தீர்த்து வைப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள மூவரடங்­கிய குழு, நடை­பெற்ற பேச்சுவார்த்தையின் போது எட்டப்பட்ட இணக்கப்பாடுகளை அமுல்படுத்த வேண்டியுள்ளது” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்