பாதிக்கப்பட்ட இடங்களைப் புனரமைக்க, 25 ஆயிரம் கோடி ரூபாய் தேவை; நிதியமைச்சர்

🕔 May 24, 2016

Ravi Karunanayake - 087
யற்கை அனர்த்தத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளை புனரமைப்பதற்காக, 15 ஆயிரம் முதல் 25 ஆயிரம் கோடி ரூபா செலவாகும் என்று நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு மற்றும் மண்சரிவு ஆகியவற்றினால் இதுவரை ஏற்பட்ட சேதங்கள் குறித்து முழுமையான கணிப்பீடு மேற்கொள்ளப்படாத நிலையிலேயே இந்த கணிப்பீட்டினைத் தெரிவிவிப்பதாக நிதியமைச்சர் கூறியுள்ளார்.

சட்டவிரோத குடியேற்றம், மற்றும் முறையற்ற விதத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டடங்கள் காரணமாகவே, கொழும்பில் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

களனி ஆற்றுக்கு இருபுறமும் இவ்வாறான சட்டவிரோத குடியேற்றங்கள் உள்ளமையினால், நிவாரண பணிகளை கூட மேற்கொள்ள முடியாத நிலை தோன்றியுள்ளதாகவும், வெள்ளப் பெருக்கு காரணமாக கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 33 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்து ஐயாயிரம் பேர் தமது வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த வெள்ளத்தினால், கொழும்பு மாவட்டத்தின் கொலன்னாவை பிரதேச செயலாளர் பிரிவிலேயே அதிகளவானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதன்படி 20 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 80 ஆயிரம் பேர் கொலன்னாவை பிரதேச செயலாளர் பிரிவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்