தவமும் நசீரும்; அழையாமல் வைத்த ஆப்பும், அழைத்துக் கொடுத்த பருப்பும் 0
– வழங்குபவர் வட்டானையார் – அரசியலில் மக்கள் விழிப்படையத் தொடங்கி விட்டார்கள் என்பதை நிரூபிக்கும் வகையில், அவ்வப்போது சில விடயங்கள் நடந்தேறி வருகின்றன. அந்த வகையில் கிழக்கு மாகாண சபையின் மு.காங்கிரஸ் பிரதிநிதிகள் இருவருக்கு கண்ணுக்குத் தெரிந்தும், தெரியாத வகையிலும் பொத்துவில் பிரதேச மக்கள் அண்மையில் ஆப்படித்திருக்கின்றனர். இதனால், குறித்த அரசியல்வாதிகள் இருவரும் அசிங்கப்பட்டுப் போயுள்ளனர் எனக் கூறப்படுகிறது.