வைத்தியசாலைக் கட்டடத்தை, ஹக்கீம் திறந்து வைத்தார்

🕔 April 11, 2017
– பிறவ்ஸ் முகம்மட் –

ம்மாந்துறை, செந்நெல் கிராமத்தில் இயங்கிவந்த ஆயுர்வேத வைத்தியசாலை மாவட்ட வைத்தியசாலையாக தரமுயர்த்தப்பட்டு, அவ் வைத்தியசாலைக்கான வெளிநோயார் பிரிவு கட்டடத் தொகுதியை நேற்று திங்கட்கிழமை மு.கா. தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் திறந்து வைத்தார்.

அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சராக இருந்த காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த வைத்தியசாலை, தற்போது சகல வசதிகளும் கொண்ட மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலையாக தரமுயர்த்தப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நஸீர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஐ.எல்.எம். மாஹிர், ஏ.எல். தவம், ஆரிப் சம்சுதீன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் மன்சூர் ஏ. காதிர் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்