அட்டாளைச்சேனை பிரதேச முன்னாள் உதவி அரசாங்க அதிபர் ஏ.சி. நஜிமுத்தீன் வபாத்

🕔 April 24, 2017

ட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் ஏ.சி. நஜிமுத்தீன் (வயது 63) இன்று திங்கள்கிழமை வபாத்தானார்.

இவர் சிறிது காலம், அட்டாளைச்சேனை பிரதேச உதவி அரசாங்க அதிபராகவும் கடமையாற்றியிருந்தார்.

மிக குறுகிய காலம் சுகயீனமுற்றிருந்த, இவர் இன்றைய தினம் வபாத்தானார்.

அன்னார் மர்ஹும் அப்துல் கரீம் விதானை தம்பதியினரின் மூத்த மகனும், நாகூர்தம்பி போடியார் தம்பதியினரின் மருமகனும், றிசானாவின் கணவருமாவார்.

இவர்,  ஓய்வு பெற்ற விரிவுரையாளர் குபைதுல்லா, ஓய்வுபெற்ற கிராமசேவை உத்தியோகத்தர் சலீம் மற்றும் மர்ஹும் ஹுசைன் (ரி.ஏ) ஆகியோரின் மைத்துனரும், சிறாஜ் (மாவட்ட உதவிப் பதிவாளர்), கியாஸ் மற்றும் நியாஸ் ஆகியோரின் சகோரனுமாவார்.

மூன்று பிள்ளைகளின் தந்தையான அன்னார், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மர்ஹும் றிஸ்வி சின்னலெப்பை, சுங்கத் திணைக்கள அதிகாரி எஸ். நியாஸ் ஆகியோரின் சகலனும், முன்னாள் பிரதியமைச்சர் எஸ். நிஜாமுதீனின் சம்பந்தியுமாவார்.

ஜனாஸா நல்லடக்கம் நாளை சுபஹு தொகையின் பின்னர், அட்டாளைச்சேனையில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்