அட்டாளைச்சேனை 10 ஆம் பிரிவைச் சேர்ந்த இர்பான், மோட்டார் பைக் விபத்தில் மரணம்
மோட்டார் பைக் விபத்தில் சிக்கி, படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த அட்டாளைச்சேனை 10 ஆம் பிரிவைச் சேர்ந்த ஏ. இர்பான் (வயது 25), இன்று வெள்ளிக்கிழமை மரணமானார்.
நண்பருடன் மோட்டார் பைக்கில் அக்கரைப்பற்று சென்று வரும் போது நிகழ்ந்த விபத்தில் படுகாயமடைந்த இவர், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், மீண்டும் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு திருப்பியனுப்பப்பட்ட நிலையில், இன்று காலை அவர் மரணமானார்.
சமூக சேவையில் ஆர்வமும், பரந்த நண்பர்கள் வட்டத்தினையும் கொண்ட இர்பானின் மரணம், பாரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவர் அமீர்தீன் – ஜலீலா ஆகியோரின் மகனும், சாதிக் மற்றும் ஜாபிர் ஆகியோரின் மருமகனுமாவார்.
விபத்தின் போது, இவருடன் மோட்டார் பைக்கில் பயணித்தவர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றார்.