தணிகிறது வெப்பம்: அம்பாறை மாவட்டத்தில் மழை

🕔 April 12, 2017

– அஹமட் –

ம்பாறை மாவட்டத்தில் கடுமையான வெப்பம் நிலவி வந்த நிலையில், இன்று புதன்கிழமை இரவு 9.30 மணியிலிருந்து இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

அம்பாறை மாவட்டத்தில் 33 செல்சியஸ் எனும் அதிக பட்ச வெப்பம் நிலவி வந்தமையினால், மக்கள் கடுமையான அசௌகரியங்களை எதிர்கொண்டு வந்தனர்.

அதி கூடிய இந்த வெப்ப நிலை காரணமாக வயது முதிர்ந்தோர் மற்றும் குழந்தைகள் நோய் தாக்கத்துக்கு ஆளாகும் நிலைமை உருவாகியிருந்தது.

இந்த நிலையிலேயே, தற்போது இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் மாரி மழை பொய்த்துப் போன நிலையில், கடுமையான வெப்பத்துடன் கூடிய கால நிலை நிலவி வந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்