Back to homepage

வட மாகாணம்

10 கோடி ரூபா தங்கத்துடன் படகில் பயணித்த இருவர் கைது

10 கோடி ரூபா தங்கத்துடன் படகில் பயணித்த இருவர் கைது

யாழ்ப்பாணம் மாதகல் பகுதியில் சுமார் 10 கோடி ரூபாய் பெறுமதியான தங்கத்துடன் படகொன்றில் பயணித்துகொண்டிருந்த இருவர் கடற்படையினரிடம் சிக்கியுள்ளனர்.  குறித்த தங்கம் 14.35 கிலோகிராம் எடை உடையதென கடற்படையினர் தெரிவிக்கின்றனர்.  மேற்படி இருவரும் கடற்படையினரின் ஆணையை பொருட்படுத்தாமல் படகில் பயணித்துகொண்டிருந்தாகவும், அதனால் அவர்களை சுற்றிவளைத்து பிடிக்க நேர்ந்தாகவும் கடற்படையினர் கூறியுள்ளனர். ஆரம்பகட்ட விசாரணைகளின் போது மேற்படி

மேலும்...
வன்னி மாவட்டத்தில் எனது பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்ய, முகவர்கள் இறக்கப்பட்டுள்ளனர்: றிசாட்

வன்னி மாவட்டத்தில் எனது பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்ய, முகவர்கள் இறக்கப்பட்டுள்ளனர்: றிசாட்

மாவட்டங்கள் தோறும் அரசியல் வியாபார முகவர்களை களமிறக்கி, சமூக வாக்குகளை சிதைத்து சின்னாபின்னமாக்குவதன் மூலம், தமது குறிக்கோளை அடையும் முயற்சிகள் அரங்கேற்றப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். முசலியில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற மக்கள் கலந்துரையாடலின் போது உரையாற்றிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் மேலும் கூறுகையில்; “இவ்வாறு

மேலும்...
முல்லைத்தீவு மக்களுக்கு உதவ முன்வந்த போது, அரசியல் நோக்கங்கள் எம்மிடம் இருக்கவில்லை: றிசாட் பதியுதீன்

முல்லைத்தீவு மக்களுக்கு உதவ முன்வந்த போது, அரசியல் நோக்கங்கள் எம்மிடம் இருக்கவில்லை: றிசாட் பதியுதீன்

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு அனைத்தையும் இழந்து, பரிதவிப்புடன் வாழ்ந்த முல்லைத்தீவு மாவட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதற்காகவே முதன்முதலில் நாங்கள் இந்தப் பிரதேசத்தில் கால்பதித்தோம் எனவும் அப்போது, அரசியல் சார்ந்த எந்த நோக்கமும் இருக்கவில்லை எனவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். முல்லைத்தீவில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற மக்கள் பணிமனை

மேலும்...
கட்சிப் பற்றாளர்களை இனங்காண்பதற்கான பொன்னான காலமிது: றிசாட் பதியுதீன்

கட்சிப் பற்றாளர்களை இனங்காண்பதற்கான பொன்னான காலமிது: றிசாட் பதியுதீன்

“கட்சிப்  பற்றாளர்களையும் உண்மையான தொண்டர்களையும் இனங்காண்கின்ற பொன்னான சந்தர்ப்பமாகவே இந்தக் காலகட்டத்தை நாம் பார்க்கவேண்டி இருக்கின்றது” என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மாந்தை மேற்கு பிரதேசபைக்குட்பட்ட கட்சியின் ஆதரவாளர்களுடனான கலந்துரையாடலின் போதே அவர் இதனைக் கூறினார். நேற்று வியாழக்கிழமை மாலை நடந்த இந்த சந்திப்பின்போது மாந்தை மேற்கு பிரதேசபை

மேலும்...
வடக்கு ஆளுநராக திருமதி சார்ல்ஸ் நியமனம்

வடக்கு ஆளுநராக திருமதி சார்ல்ஸ் நியமனம்

வடக்கு மாகாண ஆளுநராக திருமதி பி.எஸ்.எம். சார்ல்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர அதிகாரியான திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், இன்று திங்கட்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்தார். சுகாதாரம், சுதேச மருத்துவத் துறை அமைச்சின் செயலாளராகவும் இலங்கை சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாகவும் பணியாற்றியுள்ள அவர், மட்டக்களப்பு மற்றும்

மேலும்...
விவசாயிகளிடம் அகப்பட்ட 100 வயது ஆமை: வனவிலங்கு அதிகாரிகளிடம் ஒப்படைப்பு

விவசாயிகளிடம் அகப்பட்ட 100 வயது ஆமை: வனவிலங்கு அதிகாரிகளிடம் ஒப்படைப்பு

நூறு வயதுடையதாக இருக்கலாம் என நம்பப்படும் ஆமை ஒன்றை வயல் வெளியில் இருந்து விவசாயிகள் பிடித்து, வனவிலங்கு அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர். அந்த ஆமையின் எடை 17 கிலோகிராம் என வனவிலங்கு அதிகாரிகள் தெரவித்தனர். இந்த ஆமை சுமார் 100 வயதுடையதாக இருக்கலாம் என்றும் வனவிலங்கு அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டனர். வில்பத்து தேசிய பூங்காவிற்குள் குறித்த ராட்சத

மேலும்...
முஸ்லிம் காங்கிரஸ், த.தே.கூட்டமைப்பின் ஆதரவுடன், மக்கள் காங்கிரஸின் முசலிப் பிரதேச சபை பட்ஜட் நிறைவேற்றம்

முஸ்லிம் காங்கிரஸ், த.தே.கூட்டமைப்பின் ஆதரவுடன், மக்கள் காங்கிரஸின் முசலிப் பிரதேச சபை பட்ஜட் நிறைவேற்றம்

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் நிர்வாகத்தின் கீழுள்ள முசலிப்பிரதேசபையின் அடுத்தாண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் 11 உறுப்பினர்களின்  ஆதரவுடன் நிறைவேறியது. 16 உறுப்பினர்களை கொண்ட முசலிப்பிரதேசபையின்  வரவு – செலவுத்   திட்டம் இன்று திங்கட்கிழமை வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது 05 உறுப்பினர்கள் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை. அதாவது 04 உறுப்பினர்களை கொண்ட முஸ்லிம் காங்கிரசின் 02

மேலும்...
என்மீதான எந்தக் குற்றச்சாட்டையும் நிரூபிக்க முடியாது: முன்னாள் அமைச்சர் றிசாட் உறுதிபடத் தெரிவிப்பு

என்மீதான எந்தக் குற்றச்சாட்டையும் நிரூபிக்க முடியாது: முன்னாள் அமைச்சர் றிசாட் உறுதிபடத் தெரிவிப்பு

நீதியும், நியாயமும் இந்த நாட்டிலே இன்னும் உயிர் வாழுமேயானால் தன் மீதான எந்தவொரு குற்றச்சாட்டையும் நிரூபிக்க முடியாதெனவும் எந்தத் தண்டனையினையும் தனக்கு வழங்க முடியாதெனவும் முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் உறுதிபடத் தெரிவித்தார். சிங்கள இலத்திரனிய ஊடகங்களில் தன்னைப்பற்றி தொடர்ச்சியாக அபாண்டங்களை பரப்பினாலும் உண்மைகளை பொய்யாக்கி விட முடியாதெனவும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார். வவுனியா சின்ன

மேலும்...
எனது வாகனத்தின் கதவைத் திறந்து, என்னை நோக்கி ஒருவர் வாளை ஓங்கினார்: கனமூலை பகுதி அடாவடி பற்றி, றிசாட் விவரிப்பு

எனது வாகனத்தின் கதவைத் திறந்து, என்னை நோக்கி ஒருவர் வாளை ஓங்கினார்: கனமூலை பகுதி அடாவடி பற்றி, றிசாட் விவரிப்பு

சிறுபான்மை மக்களின் ஒன்றுபட்ட ஒத்துழைப்புடன் எதிர்வரும் பொதுத்தேர்தலில் சஜித் பிரேமதாசாவை பிரதமராக்கும் முயற்சியில் ஈடுபடுவோமென அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக தேசிய முன்னணி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், மன்னாரில் பல கிராமங்களுக்கு சென்ற முன்னாள்

மேலும்...
சிறுபான்மை ஆதரவின்றி, ஜனாதிபதியாக வர முடியாது என்பதை, உணர்த்தும் தேர்தலாக இது அமைய வேண்டும்: அமைச்சர் றிசாட்

சிறுபான்மை ஆதரவின்றி, ஜனாதிபதியாக வர முடியாது என்பதை, உணர்த்தும் தேர்தலாக இது அமைய வேண்டும்: அமைச்சர் றிசாட்

சிறுபான்மை சமூகத்தின் ஆதரவு இல்லாமல் இந்த நாட்டிலே ஜனாதிபதி ஒருவரை உருவாக்க முடியாது என்ற செய்தியை இனவாதிகளுக்கு உணர்த்தும் தேர்தலாக எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் அமையவேண்டும் என்று, அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். முன்னாள் மாகாணசபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் தலைமையில் சஜித் பிரேமதாசாவை ஆதரித்து மன்னாரில் இடம்பெற்ற

மேலும்...