94 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப் பொருட்கள்: வடக்கில் கைப்பற்றிய கடற்படை

🕔 October 16, 2023

94 மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான போதைப்பொருளை தலைமன்னார் – உறுமலை கடற்கரைப் பகுதியில் இன்று (16) இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

ஒரு டிங்கி படகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 04 கிலோவுக்கும் அதிகமான ஐஸ் எனப்படும் கிரிஸ்டல் மெத்தம்பெட்டமைன், சுமார் 01 கிலோ ஹெரோயின் மற்றும் 05 கிலோவுக்கும் அதிகமான ஹாஷிஸ் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

இலங்கையின் கடல் மற்றும் கரையோர வலயங்களுக்குள் போதைப்பொருள் கடத்தல் போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கில், கடற்படையின் வழமையான தேடுதல் நடவடிக்கைகளின் போது இந்த போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

கைப்பற்றப்பட்ட போதைப் பொருள்ங்கி கப்பல் கடற்படை காவலில் வைக்கப்பட்டது.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் மற்றும் டிங்கி படகு ஆகியவை சட்ட நடவடிக்கைகளுக்காக தலைமன்னார் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்