நீதிமன்றில் வழக்குச் சான்றுப் பொருளாக வைக்கப்பட்டிருந்த 50 கிலோ கஞ்சா ‘மிஸ்ஸிங்’

🕔 September 12, 2023

யாழ்ப்பாணம் – மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு சான்றுப் பொருட்களாக வைக்கப்பட்டிருந்த 50 கிலோகிராம் ‘கேரள கஞ்சா’ காணாமல் போயுள்ளதாக தெல்லிப்பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக சான்றுப் பொருட்களுக்குப் பொறுப்பான நீதிமன்றப் பதிவாளர் தெல்லிப்பளை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

மல்லாகம் நீதவான் நீதிமன்ற வளாகத்தின் மேல் மாடியில், வழக்கின் சான்றுப் பொருட்கள் வைக்கப்பட்டுள்ள அறை அமைந்துள்ளது.

இந்த நிலையில் போதைப் பொருட்களை திருடுவதற்காக வெளியாட்கள் உள்ளே நுழைந்தமைக்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவாகவே காணப்படுவதாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்