வடக்கில் வைத்தியர்கள் உட்பட சுகாதாரத்துறைப் பணியாளர்கள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை

🕔 September 17, 2023

டமை நேரத்தில் வைத்தியர்கள் உட்பட சுகாதாரத்துறைப் பணியாளர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு வட மாகாண மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் தடை விதித்துள்ளது.

வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் டி. சத்தியமூர்த்தி இது தொடர்பாக தெரிவிக்கையில், “சில சுகாதார ஊழியர்கள் – நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்குவதற்குப் பதிலாக தங்கள் கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்தி சமூக ஊடக தளங்களில் உலவுவதாகக் குற்றம் சுமத்தப்பட்ட பல முறைப்பாடுகளை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.

இந்த தடை குறிப்பாக கடமை நேரத்தில் சமூக ஊடக பயன்பாட்டிற்கு பொருந்தும் என்றும் சட்டபூர்வமான வேலை தொடர்பான நோக்கங்களுக்காக தொலைபேசிகளைப் பயன்படுத்துவதை கட்டுப்படுத்தாது என்றும் டொக்டர் சத்தியமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.

“சுகாதார ஊழியர்கள் தங்கள் தொலைபேசிகளை தகவல் தொடர்பு, மருத்துவ ஆதாரங்களை அணுகுதல் மற்றும் பிற அத்தியாவசிய பணிகளுக்கு பயன்படுத்த இன்னும் அனுமதிக்கப்படுகிறார்கள்” என, அவர் தெளிவுபடுத்தினார்.

இந்த தடையானது சுகாதார ஊழியர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை மீறும் நோக்கத்தில் இல்லை என்றும், மாறாக நோயாளிகளிடம் அலட்சியமாக நடந்து கொள்ளும் பிரச்சனையை தீர்க்கும் நோக்கத்தில் இருப்பதாகவும் அந்த அவர் விபரித்தார்.

கடமை இல்லாத நேரங்களில் கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்துவதற்கு எவ்விதத் தடைகளும் இல்லை எனவும், சுகாதாரப் பணியாளர்கள் சமூக ஊடகத் தளங்கள் மற்றும் ஏனைய தனிப்பட்ட செயற்பாடுகளில் தமது ஓய்வு நேரத்தில் ஈடுபட அனுமதிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்