ஒரு கிலோவுக்கும் அதிகமான ஐஸ் போதைப் பொருளுடன் 70 வயது நபர் கைது

🕔 September 16, 2023

ரு கிலோவுக்கும் அதிகமான ‘ஐஸ்’ போதைப்பொருளை வைத்திருந்த 70 வயதுடைய நபர் ஒருவரை யாழ்ப்பாணத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

சுமார் 01 கிலோ 40 கிராம் எடையுடைய போதைப்பொருள் இவரிடம் கைப்பற்றப்பட்டதாகவும், இதன் பெறுமதி பெறுமதி சுமார் 10 மில்லியன்.ரூபா எனவும் தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபருடன் போதைப்பொருள் கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட வேனையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

யாழ்ப்பாணம் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

சந்தேக நபர் யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறை பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்