கடல் ஆமைகள் உயிரிழந்த நிலையில் கரையொதுங்குவதற்கான காரணம் கண்டுபிடிப்பு

🕔 September 3, 2023

நெடுந்தீவு கடற்கரையில் 04 கடல் ஆமைகளின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

2023 ஆம் ஆண்டில் இதுவரை மொத்தம் 35 கடல் ஆமைகளின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஓகஸ்ட் 22 முதல் மேற்கு கடற்கரையோரத்தில் 31 கடல் ஆமைகள் கரை ஒதுங்கின.

வெளிப்புற பகுதியில் பலத்த சேதம் அடைந்த மூன்று ஆமைகளும் மீட்கப்பட்டன. பின்னர் அவை சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டன.

நீருக்கடியில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவங்களே இதற்குக் காரணம் என பிரேதப் பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக – வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்