Back to homepage

Tag "கோட்டாபய ராஜபக்ஷ"

ராஜபக்ஷ அரும்பொருட் காட்சியக வழக்கிலிருந்து கோட்டா விடுவிப்பு; கடவுச் சீட்டை வழங்குமாறும் நீதிமன்றம் உத்தரவு

ராஜபக்ஷ அரும்பொருட் காட்சியக வழக்கிலிருந்து கோட்டா விடுவிப்பு; கடவுச் சீட்டை வழங்குமாறும் நீதிமன்றம் உத்தரவு 0

🕔21.Nov 2019

டி.ஏ. ராஜபக்ஷவு நினைவு அரும்பொருட் காட்சியக வழக்கிலிருந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுவிக்கப்பட்டுள்ளார். மஹிந்த அரசாங்க காலத்தில், அரச பணத்தை மோசடியாகப் பயன்படுத்தி, தனது தந்தை டி.ஏ. ராஜபக்ஷவின் நினைவாக, அரும்பொருட் காட்சியகம் ஒன்றினை அமைத்தார் எனும் குற்றச்சாட்டில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. மேற்படி வழக்கிலிருந்தே அவரை விடுவிக்குமாறு இன்று வியாழக்கிழமை

மேலும்...
06 மாகாணங்களுக்கான ஆளுநர்கள் நியமனம்; ஒருவர் முஸ்லிம்

06 மாகாணங்களுக்கான ஆளுநர்கள் நியமனம்; ஒருவர் முஸ்லிம் 0

🕔21.Nov 2019

நாட்டிலுள்ள 06 மாகாணங்களுக்கான ஆளுநர்கள் இன்று வியாழக்கிழமை காலை நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் அவர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர். அந்த வகையில், ஆளுநர்களாக நியமிக்கப்பட்டோரின் விவரங்கள் வருமாறு; மேல் மாகாணம் – டொக்டர் சீதா அரபேபொலமத்திய மாகாணம் – லலித் யு கமகேஊவா மாகாணம் – ராஜா கொல்லூரேதென் மாகாணம் –

மேலும்...
ஹக்கீம், றிசாட் போன்றோருக்கு அடுத்த அரசாங்கத்தில் இடமில்லை: தினேஷ் குணவர்த்தன தெரிவிப்பு

ஹக்கீம், றிசாட் போன்றோருக்கு அடுத்த அரசாங்கத்தில் இடமில்லை: தினேஷ் குணவர்த்தன தெரிவிப்பு 0

🕔20.Nov 2019

மு.காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் மற்றும் றிசாட் பதியுதீன் போன்றவர்கள் அடுத்து அமைக்கப்படவுள்ள அரசாங்கத்தில் இணைத்துக் கொள்ளப்பட மாட்டார்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் கூறினார். “மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகள் விரைவாக இடம்பெற்று வருகின்றன.

மேலும்...
தனித்துவமும், தனிமைப்படுதலும்: புரிந்துகொள்ள வேண்டிய தருணம்

தனித்துவமும், தனிமைப்படுதலும்: புரிந்துகொள்ள வேண்டிய தருணம் 0

🕔19.Nov 2019

– முகம்மது தம்பி மரைக்கார் – சிறுபான்மையினர் தலையை உயர்த்தி மலைப்புடன் பார்க்கின்ற வெற்றியொன்றை ஜனாதிபதி தேர்தலில் பெற்றிருக்கிறார் கோட்டாபய ராஜபக்ஷ. கணித ரீதியாக ஓரளவு இந்த வெற்றியை முன்னதாகவே சிலர் கணித்துக் கூறியிருந்தனர். கடந்த உள்ளுராட்சித் தேர்தலில் பொதுஜனபெரமுன பெற்றுக் கொண்ட 50 லட்சம் வாக்குகளும், அதே தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குக் கிடைத்த

மேலும்...
முஸ்லிம் தலைவர்களுக்கு; ஒரு பொதுமகனின் கோரிக்கை

முஸ்லிம் தலைவர்களுக்கு; ஒரு பொதுமகனின் கோரிக்கை 0

🕔19.Nov 2019

– தாவூத் நஸீர் – முஸ்லிம் அரசியல் தலமைகள் – புதிய அரசாங்கத்தில் பதவிகளைப் பெற முயற்சிப்பது, சிங்கள மக்களை முஸ்லிம் மக்களுக்கு எதிரான உணர்வலைகளை மேலும் ஆழமாக்கி வன்முறைகளுக்கு இட்டுச் செல்லும். உங்களது பதவி ஆசைகளை துறந்து, கோட்டாபயவுக்கு வாக்களித்த 70 லட்சம் சிங்கள மக்களிடம் – முஸ்லிம் மக்கள் உறவை மேம்படுத்த வழி

மேலும்...
அரச அலுவலகங்களில் ஜனாதிபதியின் படங்கள் இனி இல்லை

அரச அலுவலகங்களில் ஜனாதிபதியின் படங்கள் இனி இல்லை 0

🕔18.Nov 2019

அரச நிறுவனங்களில் ஜனாதிபதியின் படங்களுக்குப் பதிலாக அரச இலச்சினையைக் காட்சிப்படுத்துமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளார். வீதியின் பெயர்ப் பலகைகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள அரசியல்வாதிகளின் படங்களை அகற்றுமாறும், இதன்போது அவர் ஆலோசனை வழங்கியுள்ளார். அரச அலுவலகங்களில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் துறைசார் அமைச்சர் போன்றோரின் படங்கள் காட்சிப்படுத்தப் படுகின்றமை வழக்கமாகும்.

மேலும்...
சிங்கள மக்களின் பெரும்பான்மை வாக்குகளினால்தான் ஜனாதிபதி ஆனேன்: பதவி ஏற்ற பின்னர் ஜனாதிபதி கோட்டா தெரிவிப்பு

சிங்கள மக்களின் பெரும்பான்மை வாக்குகளினால்தான் ஜனாதிபதி ஆனேன்: பதவி ஏற்ற பின்னர் ஜனாதிபதி கோட்டா தெரிவிப்பு 0

🕔18.Nov 2019

சிங்கள மக்களின் பெரும்பான்மை வாக்குகளினால் மாத்திரமே, தான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார் அனுராதபுரம் ருவன்வெலி மகா சாய பௌத்த விகாரையில் இன்று திங்கள்கிழமை நடந்த விழாவில் ஜனாதிபதியாக பதவியேற்றவுடன், அவர் ஆற்றிய உரையில் இவ்வாறு கூறினார். இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியும், கோட்டாபயவின் சகோதரருமான மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்தநாள் இன்று என்பதால்

மேலும்...
வாக்காளர்களுக்கு நன்றி; கோட்டாவுக்கு வாழ்த்து: றிசாட் பதியுதீன் தெரிவிப்பு

வாக்காளர்களுக்கு நன்றி; கோட்டாவுக்கு வாழ்த்து: றிசாட் பதியுதீன் தெரிவிப்பு 0

🕔17.Nov 2019

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வேண்டுகோளையேற்று, ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு வாக்களித்தவர்கள் அனைவருக்கும் அந்தக் கட்சியின் தலைவரும் அமைச்சருமான றிசாட் பதியுதீன் நன்றிகளைத் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு அவர் வழங்கியுள்ள அறிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ‘வாக்காளர்களாகிய உங்களுடனான எமது பயணம் எதிர்காலத்திலும் தொடருமென உறுதியளிக்கின்றோம்’ எனவும் அந்த அறிக்கையில் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, ஜனாதிபதி

மேலும்...
சஜித்தின் தோல்வி என்பது, மு.கா. தலைவரின் தோல்வியாகும்: ஐ.ச.கூட்டமைப்பு பிரதித் தலைவர் நஸார் ஹாஜி தெரிவிப்பு

சஜித்தின் தோல்வி என்பது, மு.கா. தலைவரின் தோல்வியாகும்: ஐ.ச.கூட்டமைப்பு பிரதித் தலைவர் நஸார் ஹாஜி தெரிவிப்பு 0

🕔17.Nov 2019

– அஹமட் – சஜித் பிரேமதாஸ ஜனாதிபதி தேர்தலில் தோற்றுப் போனதன் மூலம், முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரஊப் ஹக்கீம், அவரின் அரசியலில் தோற்றுப் போய் விட்டதாக ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் பிரதித் தலைவர் நஸார் ஹாஜி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் அவர் கருத்து வெளியிடுகையிலேயே இதனைக் கூறினார். இது தொடர்பாக அவர் மேலும்

மேலும்...
மஹிந்தவின் பிறந்த தினத்தில், பதவியேற்கிறார் கோட்டா

மஹிந்தவின் பிறந்த தினத்தில், பதவியேற்கிறார் கோட்டா 0

🕔17.Nov 2019

கோட்டாபய ராஜபஷ நாளை திங்கட்கிழமை அநுராதபுரத்தில் ஜனாதிபதியாக பதியேற்கவுள்ளார். முன்னாள் ஜனாதிபதியும், கோட்டாபயாவின் சகோதரருமான மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்தநாள் நாளை என்பதால் இந்த பதவியேற்பு விழா, இவ்வாறு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. நாட்டின் ஏழாவது ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபஷ தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் அறிவித்துள்ளார். முன்னதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் கோட்டாபாய, தான்

மேலும்...
வென்றார் கோட்டா: வீழ்ந்தார் சஜித்

வென்றார் கோட்டா: வீழ்ந்தார் சஜித் 0

🕔17.Nov 2019

நாட்டின் ஏழாவது நிறைவேற்று ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவாகியுள்ளார். நேற்று நடைபெற்ற தேர்தலில் இவர் 69,24,255 வாக்குகளைப் பெற்றுள்ளார். இது அளிக்கப்பட்ட வாக்குளில் 52.25 வீதமாகும். இதேவேளை, மற்றைய பிரதான வேட்பாளர் சஜித் பிரேமதாஸ 55,64,239 வாக்குகளைப் பெற்று தோல்வியடைந்துள்ளார். இவர் பெற்ற வாக்கு வீதம் 41.99 வீதமாகும். சிங்கள மக்களின் வாக்குகளைப் பெரும்பான்மையாக கோட்டாபய

மேலும்...
கோட்டாபய ராஜபக்ஷவின் குடியுரிமை தொடர்பில், அமெரிக்கா கருத்து

கோட்டாபய ராஜபக்ஷவின் குடியுரிமை தொடர்பில், அமெரிக்கா கருத்து 0

🕔13.Nov 2019

அமெரிக்க குடியுரிமையை விட்டு ஒருவர் வெளியேறிய பின்னர் அவருடைய பெயர், கூட்டாட்சி பதிவேட்டில் இடம்பெறுவதற்கு பல மாதங்கள் ஆகுமென அமெரிக்கா  தெரிவித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளரும் ஜனாதிபதி வேட்பாளருமான கோட்டாபய ராஜபக்ஷவின் அமெரிக்க குடியுரிமை விவகாரம் தொடர்பாக, அமெரிக்க தூதுவராலயத்தின் செய்தி தொடர்பாளர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்; “ஒருவர்,

மேலும்...
கோட்டாவின் குடியுரிமை விவகாரம்: உச்ச நீதிமன்றில் மேன்முறையீடு

கோட்டாவின் குடியுரிமை விவகாரம்: உச்ச நீதிமன்றில் மேன்முறையீடு 0

🕔13.Nov 2019

கோட்டாபய ராஜபக்‌ஷவின் இலங்கை குடியுரிமை தொடர்பில் உச்ச நீதிமன்றில் இன்று புதன்கிழமை மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது. காமினி வியங்கொட மற்றும் பேராசிரியர் சந்திரகுப்த தேனுவர ஆகியோர் இந்த மேன்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளனர். குறித்த விடயம் தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை சவாலுக்கு உட்படுத்தியே, இந்த மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி

மேலும்...
கோட்டாவின் பிரஜாவுரிமை: சட்டத்தின் பார்வை

கோட்டாவின் பிரஜாவுரிமை: சட்டத்தின் பார்வை 0

🕔13.Nov 2019

– வை.எல்.எஸ். ஹமீட் – ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் அமெரிக்கப் பிரஜாவுரிமை நீக்கப்படவில்லை என்றும், அவர் இன்னும் இலங்கைப் பிரஜையாக மாறவில்லை எனவும் கூறி, மீண்டும் ஒரு சர்ச்சை கிளப்பி விடப்பட்டுள்ளது. இந்த நிலையில், கோட்டாபய மீது சேறடிக்கும் வகையிலேயே, இந்த விவகாரத்தை எதிரணியினர் கையில் எடுத்துள்ளதாக, கோட்டா தரப்பினர் கூறியுள்ளனர். இவ்வாறான சூழ்நிலையில்,

மேலும்...
உணச்சிக்கும் அறிவுக்கும் இடையில், சிக்கித் தவிக்கும் தேர்தல்

உணச்சிக்கும் அறிவுக்கும் இடையில், சிக்கித் தவிக்கும் தேர்தல் 0

🕔12.Nov 2019

– முகம்மது தம்பி மரைக்கார் – எழுந்தமானமாக ஓரிடத்தில் கூடிநின்ற சிலரிடம், விருப்பு “வாக்குகளை எவ்வாறு வழங்குவது” எனக் கேட்டபோது, அவர்களில் கணிசமானோர் கூறிய பதில்கள் தவறாக இருந்தன. இத்தனை கட்சிகள் களத்தில் நிற்கின்ற போதிலும், வாக்களிப்பு முறை பற்றி மக்கள் அறிவூட்டப்படவில்லை. ‘எங்கள் சின்னத்துக்கு புள்ளடியிட்டால் போதும்’ என்கிற வரையில்தான் வாக்காளர்களை அனைத்துக் கட்சிகளும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்