வென்றார் கோட்டா: வீழ்ந்தார் சஜித்

🕔 November 17, 2019

நாட்டின் ஏழாவது நிறைவேற்று ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவாகியுள்ளார்.

நேற்று நடைபெற்ற தேர்தலில் இவர் 69,24,255 வாக்குகளைப் பெற்றுள்ளார். இது அளிக்கப்பட்ட வாக்குளில் 52.25 வீதமாகும்.

இதேவேளை, மற்றைய பிரதான வேட்பாளர் சஜித் பிரேமதாஸ 55,64,239 வாக்குகளைப் பெற்று தோல்வியடைந்துள்ளார். இவர் பெற்ற வாக்கு வீதம் 41.99 வீதமாகும்.

சிங்கள மக்களின் வாக்குகளைப் பெரும்பான்மையாக கோட்டாபய ராஜபக்ஷவும், தமிழர் மற்றும் முஸ்லிம்களின் பெரும்பான்மை வாக்குகளை சஜித் பிரேமதாஸவும் பெற்றுள்ளனர்.

இம்முறை பெரிய முஸ்லிம் கட்சிகளும், பெரிய தமிழர் கட்சிகளும் சஜித் பிரேமதாஸவை ஆதரித்திருந்த போதும், அவர் தோல்வியைத் தழுவியமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்