வாக்காளர்களுக்கு நன்றி; கோட்டாவுக்கு வாழ்த்து: றிசாட் பதியுதீன் தெரிவிப்பு

🕔 November 17, 2019

கில இலங்கை மக்கள் காங்கிரஸின் வேண்டுகோளையேற்று, ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு வாக்களித்தவர்கள் அனைவருக்கும் அந்தக் கட்சியின் தலைவரும் அமைச்சருமான றிசாட் பதியுதீன் நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு அவர் வழங்கியுள்ள அறிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

‘வாக்காளர்களாகிய உங்களுடனான எமது பயணம் எதிர்காலத்திலும் தொடருமென உறுதியளிக்கின்றோம்’ எனவும் அந்த அறிக்கையில் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற கோட்டாபய ராஐபக்ஷவுக்கு தமது வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும் மக்கள் காங்கிரஸ் தலைவர் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்