06 மாகாணங்களுக்கான ஆளுநர்கள் நியமனம்; ஒருவர் முஸ்லிம்

🕔 November 21, 2019

நாட்டிலுள்ள 06 மாகாணங்களுக்கான ஆளுநர்கள் இன்று வியாழக்கிழமை காலை நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் அவர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.

அந்த வகையில், ஆளுநர்களாக நியமிக்கப்பட்டோரின் விவரங்கள் வருமாறு;

மேல் மாகாணம் – டொக்டர் சீதா அரபேபொல
மத்திய மாகாணம் – லலித் யு கமகே
ஊவா மாகாணம் – ராஜா கொல்லூரே
தென் மாகாணம் – டொக்டர் வில்லி கமகே
வடமேல் மாகாணம் – ஏ.ஜே.எம் முஸம்மில்
சப்ரகமுவ மாகாணம் – டிகிரி கொப்பேகடுவ

ஜனாதிபதி செயலகத்தின் அறிவுறுத்தலுக்கு இணங்க, நேற்றைய தினம் அனைத்து மாகாண ஆளுநர்களும் தமது பதவிகளை ராஜிநாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்