கோட்டாபய ராஜபக்ஷவின் குடியுரிமை தொடர்பில், அமெரிக்கா கருத்து

🕔 November 13, 2019

மெரிக்க குடியுரிமையை விட்டு ஒருவர் வெளியேறிய பின்னர் அவருடைய பெயர், கூட்டாட்சி பதிவேட்டில் இடம்பெறுவதற்கு பல மாதங்கள் ஆகுமென அமெரிக்கா  தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளரும் ஜனாதிபதி வேட்பாளருமான கோட்டாபய ராஜபக்ஷவின் அமெரிக்க குடியுரிமை விவகாரம் தொடர்பாக, அமெரிக்க தூதுவராலயத்தின் செய்தி தொடர்பாளர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்; “ஒருவர், தனது குடியுரிமையை விட்டு வெளியேறியதும், அவரின் பெயர் அமெரிக்க பெடரல் பதிவேட்டில் தோன்றுவதற்கு பல மாதங்கள் ஆகும்.

மேலும் அமெரிக்க சட்டத்தின் பிரகாரம், தனிப்பட்ட ஒருவரின் கடவுச்சீட்டு அல்லது குடியுரிமை குறித்து அறிக்கைகளை வெளியிட முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்