சிங்கள மக்களின் பெரும்பான்மை வாக்குகளினால்தான் ஜனாதிபதி ஆனேன்: பதவி ஏற்ற பின்னர் ஜனாதிபதி கோட்டா தெரிவிப்பு

🕔 November 18, 2019

சிங்கள மக்களின் பெரும்பான்மை வாக்குகளினால் மாத்திரமே, தான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்

அனுராதபுரம் ருவன்வெலி மகா சாய பௌத்த விகாரையில் இன்று திங்கள்கிழமை நடந்த விழாவில் ஜனாதிபதியாக பதவியேற்றவுடன், அவர் ஆற்றிய உரையில் இவ்வாறு கூறினார்.

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியும், கோட்டாபயவின் சகோதரருமான மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்தநாள் இன்று என்பதால் இந்த பதவியேற்பு விழா இந்த தினத்தில் ஒருங்கிணைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

7-வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ஆகியுள்ள கோட்டாபய, தமது பதவியேற்பின்போது ஆற்றிய உரையில்;

தமிழர்களின் வாக்குகளையும் தான் எதிர்பார்த்த போதிலும், தான் எதிர்பார்த்தளவு தமிழர்கள் தனக்கு வாக்களிக்கவில்லை என்று கூறினார்.

இனிவரும் காலங்களிலாவது தன்னுடன் இணைந்து செயற்பட முன்வருமாறு தமிழர்களுக்கு கோட்டாபய ராஜபக்ஷ அழைப்பு விடுத்தார்.

தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவது தனது முதலாவது திட்டம் எனவும் அவர் கூறினார்.

சட்டத்தின் ஆட்சியை மதிக்கும், லஞ்ச ஊழல் அற்ற ஆட்சி ஒன்றை ஏற்படுத்தப் போவதாகவும் அவர் உறுதியளித்தார்.

அத்துடன் தன்னுடன் இணைந்து செயற்பட முன்வருமாறு வெளிநாடுகளிடம் கோட்டாபய ராஜபக்ஷ கோரிக்கை விடுத்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்