ஹக்கீம், றிசாட் போன்றோருக்கு அடுத்த அரசாங்கத்தில் இடமில்லை: தினேஷ் குணவர்த்தன தெரிவிப்பு

🕔 November 20, 2019

மு.காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் மற்றும் றிசாட் பதியுதீன் போன்றவர்கள் அடுத்து அமைக்கப்படவுள்ள அரசாங்கத்தில் இணைத்துக் கொள்ளப்பட மாட்டார்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் கூறினார்.

“மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகள் விரைவாக இடம்பெற்று வருகின்றன.

அரசியல்யாப்பின் படி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை அமைச்சரவைக்கு தலைமை தாங்குவார்.

புதிய அரசாங்கம் அமைக்கப்படும் போது ரஊப் ஹக்கீம், றிசாட் பதியுதீன் போன்றவர்களுக்கு இடமளிக்கப் போவதில்லை.

நாடாளுமன்றில பெரும்பான்மை பலத்தை பூர்த்தி செய்வதற்கான பற்றாக்குறை என்று எதுவும் இல்லை.

அதேநேரம், ஒற்றை ஆட்சிக்கு எதிரான மற்றும் வடக்கு, கிழக்கை இணைக்க முயற்சிக்கின்ற யாரையும் எமது அரசாங்கத்தில் பங்காளிகளாக சேர்த்துக் கொள்ளப் போவதும் இல்லை” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்