மஹிந்தவின் பிறந்த தினத்தில், பதவியேற்கிறார் கோட்டா
கோட்டாபய ராஜபஷ நாளை திங்கட்கிழமை அநுராதபுரத்தில் ஜனாதிபதியாக பதியேற்கவுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதியும், கோட்டாபயாவின் சகோதரருமான மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்தநாள் நாளை என்பதால் இந்த பதவியேற்பு விழா, இவ்வாறு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
நாட்டின் ஏழாவது ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபஷ தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் அறிவித்துள்ளார்.
முன்னதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் கோட்டாபாய, தான் வெற்றி பெற்றதாக அறிவித்துக் கொண்டார். தமது தோல்வியை ஒப்புக் கொள்வதாக ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளரும், இரண்டாமிடம் பெற்றவருமான சஜித் பிரேமதாச அறிவித்தார்.
இந்த நிலையில், எனக்கு வாக்களித்தவர்களுக்கு மட்டும் நான் ஜனாதிபதி அல்ல. மாறாக எனக்கு வாக்களிக்காதவர்களுக்கும் நான் ஜனாதிபதியே. அவர்கள் என்ன மதமாகவோ இனமாகவோ இருந்தாலும் சரியே. இலங்கையின் அனைத்து பிரஜைகளுக்கும் சேவை செய்ய நான் என்னை ஆழமாக அர்ப்பணிப்பேன் என, கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.