அரச அலுவலகங்களில் ஜனாதிபதியின் படங்கள் இனி இல்லை
அரச நிறுவனங்களில் ஜனாதிபதியின் படங்களுக்குப் பதிலாக அரச இலச்சினையைக் காட்சிப்படுத்துமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளார்.
வீதியின் பெயர்ப் பலகைகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள அரசியல்வாதிகளின் படங்களை அகற்றுமாறும், இதன்போது அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
அரச அலுவலகங்களில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் துறைசார் அமைச்சர் போன்றோரின் படங்கள் காட்சிப்படுத்தப் படுகின்றமை வழக்கமாகும்.