இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களில் 06 பேர், O/L வரையில் மட்டுமே படித்தவர்கள்

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களில் 06 பேர், O/L வரையில் மட்டுமே படித்தவர்கள் 0

🕔18.Jan 2023

இலங்கையில் நாடாளுமன்றில் 06 உறுப்பினர்கள் – சாதாரண தரம் (O/L) வரையில் மட்டுமே படித்தவர்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற இணையத்தளத்தில் உறுப்பினர்களின் கல்வித் தகைமைகள் குறித்து வெளியிடப்பட்ட தகவல்களில் இருந்து இவ்விடயம் தெரியவந்துள்ளது. 52 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது கல்வித் தகைமையாக க.பொ.த உயர்தரம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. சிலர் ‘உயர்தரம் வரை’ என்று குறிப்பிட்டுள்ளதால், அவர்கள் உயர்தரத்தில்

மேலும்...
உண்டியல் குலுக்கி சேகரித்த பணம், மைத்திரியிடம் ஒப்படைப்பு: நையாண்டி வேலை என, ஊடகம் தெரிவிப்பு

உண்டியல் குலுக்கி சேகரித்த பணம், மைத்திரியிடம் ஒப்படைப்பு: நையாண்டி வேலை என, ஊடகம் தெரிவிப்பு 0

🕔18.Jan 2023

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உதவுவதற்காக நடிகர் சுதத்த திலகசிறி – இன்று (18) உண்டியல் குலுக்கி பணம் சேகரிக்கும் நடவடிக்கையொன்றில் ஈடுபட்டார். ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட முன்னாள் அரசாங்க அதிகாரிகள் குழுவிற்கு வியாழக்கிழமையன்று (12) இலங்கை உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதில் மைத்திரிபால சிறிசேன

மேலும்...
உதைப்பந்தாட்ட சம்மேளன தலைவர் ஸ்ரீரங்கா உள்ளிட்ட நிருவாகத்துக்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை

உதைப்பந்தாட்ட சம்மேளன தலைவர் ஸ்ரீரங்கா உள்ளிட்ட நிருவாகத்துக்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை 0

🕔18.Jan 2023

இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் புதிய தலைவர் ஜே. ஸ்ரீரங்கா உட்பட புதிய நிர்வாகத்துக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (18) இடைக்கால தடை விதித்துள்ளது. இந்த உத்தரவு நாளை வரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் ஜஸ்வர் உமர் தாக்கல் செய்த முறைப்பாடு தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த இடைக்கால

மேலும்...
விட்டுச் சென்று விடுவாளோ என்கிற அச்சத்தில் நடந்த கொலை: பல்கலைக்கழக மாணவியைக் கொன்ற காதலன்

விட்டுச் சென்று விடுவாளோ என்கிற அச்சத்தில் நடந்த கொலை: பல்கலைக்கழக மாணவியைக் கொன்ற காதலன் 0

🕔18.Jan 2023

தனது காதலி தன்னை வேறு கைவிட்டு, வேறு நபரைக் காதலித்து விடுவாளோ எனும் அச்சத்தின் காரணமாகவே, அவரைக் கொன்றதாக, கொழும்பு குதிரைப்பந்தைய மைதானத்தில் காதலியை நேற்று (17) கத்தியால் குத்தி கொன்ற காதலன் தெரிவித்துள்ளார். ஹோமாகம கிரிவத்துடுவ பகுதியைச் சேர்ந்த சத்துரி ஹன்சிகா மல்லிகராச்சி (வயது 24) என்ற பெண்ணே நேற்று பிற்பகல் 1.00 மணியளவில்,

மேலும்...
கல்முனை மாநகர சபை தேர்தலுக்கான வேட்புமனுவை ஏற்றுக் கொள்வதற்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை: நடந்தது என்ன?

கல்முனை மாநகர சபை தேர்தலுக்கான வேட்புமனுவை ஏற்றுக் கொள்வதற்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை: நடந்தது என்ன? 0

🕔17.Jan 2023

– மப்றூக் – கல்முனை மாநகர சபை தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக் கொள்வதற்கு, நாளை மறுதினம் 19ஆம் திகதி வரை – உச்ச நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. சாய்ந்தமருது பிரதேசத்தைச் சேர்ந்த ஏ.எல்.எம். சலீம் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவை கவனத்திற் கொண்ட நீதிமன்றம், இந்த இடைக்கால தடையுத்தரவைப் பிறப்பித்துள்ளது. என்ன நடந்தது?

மேலும்...
உள்ளூராட்சித் தேர்தல்: வேட்புமனுத் தாக்கல் நாளை ஆரம்பம்

உள்ளூராட்சித் தேர்தல்: வேட்புமனுத் தாக்கல் நாளை ஆரம்பம் 0

🕔17.Jan 2023

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை (18) ஆரம்பமாகவுள்ளது. வேட்புமனு சமர்ப்பிக்கும் நடவடிக்கை எதிர்வரும் 21ஆம் திகதி நண்பகல் 12 மணியுடன் நிறைவடையவுள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக, 341 உள்ளூராட்சி மன்றங்களில் 340 மன்றங்களுக்கான வேட்புமனுத் தாக்கல் நாளை முதல் ஆரம்பிக்கப்படுமென தேர்தல் ஆணைக்குழு கடந்த 04  ஆம் திகதி அறிவித்திருந்தது. உள்ளூராட்சி

மேலும்...
‘மசாஜ்’ தொடர்பில் புதிய சட்டம் வரவுள்ளதாக வெளிவந்த செய்திக்கு மறுப்பு

‘மசாஜ்’ தொடர்பில் புதிய சட்டம் வரவுள்ளதாக வெளிவந்த செய்திக்கு மறுப்பு 0

🕔17.Jan 2023

மசாஜ் நிலையங்களில் ஆணுக்கு – ஆணும், பெண்ணுக்கு பெண்ணும் மட்டுமே மசாஜ் செய்யும் வகையில் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக வெளியான செய்திகளில் உண்மை கிடையாது என, ஆயுர்வேத திணைக்களம் மறுப்புத் தெரிவித்துள்ளது. ஆணுக்கு ஆணும், பெண்ணுக்கு பெண்ணும் மட்டுமே மசாஜ் செய்ய அனுமதிக்கும் வகையில், புதிய சட்டமொன்று கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை ஆயுர்வேத திணைக்களம் மேற்கொண்டு

மேலும்...
அதாஉல்லாவுக்கு எதிரான தரப்புகள் ஒன்றிணைந்து, அக்கரைப்பற்று தேர்தல் களத்தில் குதிக்க முஸ்தீபு

அதாஉல்லாவுக்கு எதிரான தரப்புகள் ஒன்றிணைந்து, அக்கரைப்பற்று தேர்தல் களத்தில் குதிக்க முஸ்தீபு 0

🕔17.Jan 2023

– அஹமட் – அக்கரைப்பற்று மாநகர சபை மற்றும் பிரதேச சபைகளுக்கான தேர்தலில், நாடாளுமுன்ற உறுப்பினரும் தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஏ.எல்.எம். அதாஉல்லாவின் அரசியலுக்கு எதிரான தரப்புகள் அனைத்தும் – ஒரே அணியாக இணைந்து தேர்தலில் குதிப்பதற்கான முயற்சியொன்று மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறிய முடிகிறது. இது தொடர்பில் அண்மையில் அதாஉல்லாவுக்கு எதிரான அணியினரின் சந்திப்பொன்றும்

மேலும்...
உலக பணக்காரர்களில் முதலிடத்தில் இருந்த எலோன் மஸ்க், அதிக ‘நஷ்டத்தை சந்தித்தவர்’ எனும் கின்னஸ் சாதனையை ஏற்படுத்தியுள்ளார்

உலக பணக்காரர்களில் முதலிடத்தில் இருந்த எலோன் மஸ்க், அதிக ‘நஷ்டத்தை சந்தித்தவர்’ எனும் கின்னஸ் சாதனையை ஏற்படுத்தியுள்ளார் 0

🕔17.Jan 2023

உலக பணக்காரர்களில் முதலிடத்தில் இருந்த எலோன் மஸ்க், வரலாற்றில் மிகப்பெரிய தனிப்பட்ட செல்வத்தை இழந்தமையினால், அது உலக சாதனையாகி உள்ளது. நொவம்பர் 2021 முதல் டிசம்பர் 2022 வரை அவர் சுமார் 165 பில்லியன் டொலர்களை (இலங்கை மதிப்பில் 60 லட்சத்து 43 அயிரத்து 721 கோடி ரூபா) இழந்தார் என்று – கின்னஸ் உலக

மேலும்...
தேர்தல் செலவினங்களை ஒழுங்குபடுத்தும் சட்டமூலம் தொடர்பில் அறிவிப்பு

தேர்தல் செலவினங்களை ஒழுங்குபடுத்தும் சட்டமூலம் தொடர்பில் அறிவிப்பு 0

🕔17.Jan 2023

தேர்தல் செலவினங்களை ஒழுங்குபடுத்தும் சட்டமூலம் அரசியலமைப்புக்கு இசைவானது எனவும் அதனை நாடாளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் எனவும் உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார். நாடாளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழு – நாளை கூடவுள்ளது. அக்குழு தீர்மானித்தால், தேர்தல் செலவினங்களை ஒழுங்குபடுத்தும் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு விவாதம் ஜனவரி 19

மேலும்...
அரச ஊழியர்களின் சம்பளத்தை பிற்படுத்த தீர்மானம்: யாருக்கெல்லாம் தாமதமாகும்?

அரச ஊழியர்களின் சம்பளத்தை பிற்படுத்த தீர்மானம்: யாருக்கெல்லாம் தாமதமாகும்? 0

🕔17.Jan 2023

நாட்டின் தற்போதைய நிதி நிலைமை காரணமாக குறிப்பிட்ட அரச துறை ஊழியர்களின் சம்பளத்தை சில நாட்கள் தாமதப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நிறைவேற்று அதிகாரம் அற்ற அரச துறை ஊழியர்களுக்கு, உரிய காலத்தில் சம்பளம் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இருந்தபோதிலும், நிறைவேற்று தர ஊழியர்களின் சம்பளத்தை சில நாட்களுக்கு தாமதப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 2023

மேலும்...
ஆணுக்கு பெண்ணும், பெண்ணுக்கு ஆணும், இனி பண்ண முடியாது:  மசாஜ் நிலையங்களுக்கு வருகிறது புதிய சட்டம்

ஆணுக்கு பெண்ணும், பெண்ணுக்கு ஆணும், இனி பண்ண முடியாது: மசாஜ் நிலையங்களுக்கு வருகிறது புதிய சட்டம் 0

🕔16.Jan 2023

ஆணுக்கு ஆணும், பெண்ணுக்கு பெண்ணும் மட்டுமே மசாஜ் செய்யும் வகையில் சட்டம் கொண்டுவரப்படவுள்ளதாக, ஆயுர்வேத ஆணையாளர் நாயகம் டொக்டர் எம்.டி.ஜே. அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். மசாஜ் நிலையங்கள் மூலம் எயிட்ஸ் உள்ளிட்ட பால்வினை நோய்கள் பரவி வருவதால், இந்த புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். மசாஜ் நிலையங்கள் ஆயுர்வேத திணைக்களத்தில் பதிவு செய்யப்பட வேண்டும்

மேலும்...
குமார வெல்கம, சம்பிக்க ரணவக்க தரப்பு, தேர்தலில் இணைந்து போட்டியிடும் ஒப்பந்தத்தில் கைச்சாத்து

குமார வெல்கம, சம்பிக்க ரணவக்க தரப்பு, தேர்தலில் இணைந்து போட்டியிடும் ஒப்பந்தத்தில் கைச்சாத்து 0

🕔16.Jan 2023

நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தலைமையிலான ‘நவ லங்கா சுதந்திரக் கட்சி’யும், நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையிலான ’43 ஆவது படையணி’யும் எதிர்வரும் உள் ளூராட்சி மன்றத் தேர்தலில் இணைந்து போட்டியிடுவதற்கான ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டுள்ளனர. இதேவேளை உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவடைந்த பின்னர் 43 ஆவது படையணியை அரசியல் கட்சியாக மாற்ற எதிர்பார்த்துள்ளதாக,

மேலும்...
சட்ட விரோதமாக 75 மில்லியன் சொத்து சேர்த்தார்: விமலுக்கு எதிரான மனு தொடர்பில், வரும் மாதம் தீர்மானம்

சட்ட விரோதமாக 75 மில்லியன் சொத்து சேர்த்தார்: விமலுக்கு எதிரான மனு தொடர்பில், வரும் மாதம் தீர்மானம் 0

🕔16.Jan 2023

சட்ட விரோதமாக 75 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான சொத்துக்களை சேர்த்தார் என, முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிராக – தாக்கல் செய்யப்பட்ட மனுவை, விசாரணைக்கு எடுத்துக் கொள்வதா – இல்லையா என்பது தொடர்பில், கொழும்பு மேல் நீதிமன்றம் பெப்ரவரி 28 ஆம் திகதி தனது முடிவை அறிவிக்கவுள்ளது. இது தொடர்பான மனு இன்று (16)

மேலும்...
அதிரடிப்படை சார்ஜன்ட் உட்பட இருவர் வாள் வெட்டில் பலி

அதிரடிப்படை சார்ஜன்ட் உட்பட இருவர் வாள் வெட்டில் பலி 0

🕔16.Jan 2023

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் சார்ஜன்ட் உட்பட இருவர் கிரியுல்ல பகுதியில் நேற்று (15) இரவு வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளனர். தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த சம்பவம் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. உயிரிழந்தவர்கள் தம்பதெனிய பகுதியைச் சேர்ந்த சார்ஜன்ட் இஷார மஹேஷ் பண்டார (வயது 41) மற்றும் அவரது நண்பரான கசுன் புஷ்பகுமார (38) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்