இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களில் 06 பேர், O/L வரையில் மட்டுமே படித்தவர்கள்

இலங்கையில் நாடாளுமன்றில் 06 உறுப்பினர்கள் – சாதாரண தரம் (O/L) வரையில் மட்டுமே படித்தவர்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற இணையத்தளத்தில் உறுப்பினர்களின் கல்வித் தகைமைகள் குறித்து வெளியிடப்பட்ட தகவல்களில் இருந்து இவ்விடயம் தெரியவந்துள்ளது.
52 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது கல்வித் தகைமையாக க.பொ.த உயர்தரம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிலர் ‘உயர்தரம் வரை’ என்று குறிப்பிட்டுள்ளதால், அவர்கள் உயர்தரத்தில் சித்தி பெற்றனரா என்பதை உறுதிப்படுத்தாததால் இந்த எண்ணிக்கையை உறுதிப்படுத்த முடியாதுள்ளது.
23 நாடாளுமன்ற உறுப்பினர்கள் டிப்ளோமா கல்வித் தகைமையைக் கொண்டுள்ளனர்.
70 பேர் தாங்கள் இளமாணி அல்லது பட்டதாரிகள் என்று குறிப்பிட்டுள்ளனர்.
இணையத்தளத்தில் உள்ள தரவுகளின்படி, 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதுமாணி பட்டங்களை தங்களின் மிக உயர்ந்த கல்வித் தகுதியாக குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன், 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலாநிதி பட்டத்தை பெற்றுள்ளனர்.
225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 208 பேர் மட்டுமே தங்கள் கல்வித் தகைமையை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.