மஹிந்த அமரவீர அமைச்சர் பதவியிலிருந்து ராஜிநாமா

🕔 January 19, 2023

னஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சர் பதவியிலிருந்து தான் விலகியுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அப்பதவிக்கு வேறு ஒருவரை நியமிப்பதற்கு, ஜனாதிபதிக்கு வழி வகுக்கும் வகையில் – தான் பதவி விலகியுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர கூறியுள்ளார்.

இருந்தபோதிலும், அவர் விவசாயத்துறை அமைச்சராக தொடர்ந்தும் பதவி வகிப்பார்.

இதேவேளை, இரண்டு புதிய அமைச்சர்கள் இன்று (19) பதவிப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் நூற்றாண்டு விழாவில் உரை நிகழ்த்துகையில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்