ஜீவன், பவித்ரா அமைச்சர்களாக சத்தியப் பிரமாணம்

🕔 January 19, 2023

மைச்சரவை அந்தஷ்துள்ள அமைச்சர்களாக இருவர் இன்று (19) நியமிக்கப்பட்டுள்ளனர் என, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் செயலாளர் ஜீவன் தொண்டமான், மன்றும் பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் பவித்திரா வன்னியாராச்சி ஆகியோரே இவ்வாறு அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சராக ஜீவன் தொண்டமான் சத்தியப் பிரமாணம் செய்துள்ளார்.

இதேவேளை, வன ஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சராக பவித்திரா வன்னியாராச்சி சத்தியப் பிரமானம் செய்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இந் நிகழ்வு சற்று முன்னர் இடம்பெற்றது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்