ஜனாதிபதி தேர்தல் பற்றிய உத்தியோகபூர்வ அறிவிப்பை, அடுத்த மாதம் ரணில் வெளியிடுவார்: அமைச்சர் மனுஷ

🕔 May 21, 2024

னாதிபதி தேர்தல் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடுத்த மாதம் வெளியிடவுள்ளார் என, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

தான் தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என்பதை, ஜனாதிபதி விக்ரமசிங்கவே தெளிவுபடுத்துவார் எனவும் அவர் கூறினார்.

மேலும், முதலில் ஜனாதிபதி தேர்தலே நடத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள், ஜனாதிபதி போட்டியிடுவது தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்புவதாக கூறிய அவர், ஐக்கிய மக்கள் சக்தியினர் அச்சப்படுவதாகவும் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்