டயானாவுக்கு பிணை வழங்கி, நீதிமன்றம் உத்தரவு

🕔 May 21, 2024

பொய்யான தகவல்களை சமர்ப்பித்து – கடவுச்சீட்டு பெற்ற குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் ராஜாங்க அமைச்சர் டயானா கமகே, கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜரான பின்னர் – பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

பொய்யான தகவல்களை சமர்ப்பித்து கடவுச்சீட்டை பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டின் பேரில் அவர் இன்று (21) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

பொய்யான தகவல்களை வழங்கி ராஜதந்திர கடவுச்சீட்டைப் பெற்றமை தொடர்பான வழக்கில், முன்னாள் ராஜாங்க அமைச்சரை சந்தேக நபராக பெயரிட்டு – குற்றப் புலனாய்வுத் திணைக்களம், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் நேற்று அறிக்கை சமர்ப்பித்தது.

இதன்படி, உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு, கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டிருந்தார்.

தொடர்பான செய்தி: குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் டயானாவை விசாரிக்க, சிஐடியினருக்கு சட்ட மா அதிபர் உத்தரவு

Comments

புதிது பேஸ்புக் பக்கம்