ஈரான் ஜனாதிபதியின் உடலுக்கு பல்லாயிரக்கணக்கானோர் அஞ்சலி: நாளைய நிகழ்வில் ஆயத்துல்லா அலி கொமெய்னி பங்கேற்கிறார்

🕔 May 21, 2024

ரான் ஜனாதிபதி இப்றாஹிம் ரைசியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வொன்று நாளை (22) புதன்கிழமை, தலைநகர் தெஹ்ரானில் நடைபெறவுள்ளது. இதில் அந்த நாட்டின் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி கொமெய்னி மற்றும் வெளிநாட்டு பிரமுகர்கள் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹெலிகொப்டர் விபத்தில் ஞாயிற்றுக்கிழமை மரணித்த ஜனாதிபதி இப்ராஹிம் ரைசிக்கான பிரியாவிடை ஊர்வலம் – கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தின் தலைநகரான தப்ரிஸில் இன்று நடைபெற்ற போது, பெருந்திரளான மக்கள் ஒன்றுகூடினர்.

அந்த விபத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹுசைன் அமிர் அப்துல்லாஹியன் உள்ளிட்ட பலர் இறந்தனர்.

இப்றாஹிம் ரைசியின் உடல் – அவர் பிறந்து வளர்ந்த வடகிழக்கில் அமைந்துள்ள நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான மஷாத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.

இது இவ்வாறிருக்க, இந்த விபத்து நாசகார செயல் அல்ல என்று கூறப்படுகிறது.

பல தசாப்தங்கள் பழமையானதாக நம்பப்படும் இரண்டு விசிறிகளைக் கொண்ட பெல் 212 ஹெலிகொப்டரில் ஜனாதிபதி ரைசியும் மற்றவர்களும் பயணித்திருக்க வேண்டுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்