உதைப்பந்தாட்ட சம்மேளன தலைவர் ஸ்ரீரங்கா உள்ளிட்ட நிருவாகத்துக்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை

🕔 January 18, 2023

லங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் புதிய தலைவர் ஜே. ஸ்ரீரங்கா உட்பட புதிய நிர்வாகத்துக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (18) இடைக்கால தடை விதித்துள்ளது.

இந்த உத்தரவு நாளை வரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் ஜஸ்வர் உமர் தாக்கல் செய்த முறைப்பாடு தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த இடைக்கால தடையுத்தரவை வழங்கியுள்ளது.

கடந்த சனிக்கிழமை நடைபெற்ற இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை, முன்னாள் தலைவர் ஜஸ்வர் உமருக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க மறுத்திருந்தார்.

தனக்கு தலைவர் பதவிக்கு வாய்ப்பு வழங்காமல், விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க பாரிய அநீதி இழைத்ததாக நேற்று பிற்பகல் நேற்று நீதிமன்றத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்