ஆணுக்கு பெண்ணும், பெண்ணுக்கு ஆணும், இனி பண்ண முடியாது: மசாஜ் நிலையங்களுக்கு வருகிறது புதிய சட்டம்

🕔 January 16, 2023

ணுக்கு ஆணும், பெண்ணுக்கு பெண்ணும் மட்டுமே மசாஜ் செய்யும் வகையில் சட்டம் கொண்டுவரப்படவுள்ளதாக, ஆயுர்வேத ஆணையாளர் நாயகம் டொக்டர் எம்.டி.ஜே. அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

மசாஜ் நிலையங்கள் மூலம் எயிட்ஸ் உள்ளிட்ட பால்வினை நோய்கள் பரவி வருவதால், இந்த புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

மசாஜ் நிலையங்கள் ஆயுர்வேத திணைக்களத்தில் பதிவு செய்யப்பட வேண்டும் என்பதோடு, அனுபவம் வாய்ந்த வைத்தியரும் பணியில் இருக்க வேண்டும்.

மசாஜ் நடவடிக்கைகளில் ஈடுபடும் ஊழியர்கள் தொழில்முறை அறிவு மற்றும் பயிற்சி பெற்றிருக்க வேண்டும் என்றும் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்