அதிரடிப்படை சார்ஜன்ட் உட்பட இருவர் வாள் வெட்டில் பலி

🕔 January 16, 2023

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் சார்ஜன்ட் உட்பட இருவர் கிரியுல்ல பகுதியில் நேற்று (15) இரவு வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளனர்.

தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த சம்பவம் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

உயிரிழந்தவர்கள் தம்பதெனிய பகுதியைச் சேர்ந்த சார்ஜன்ட் இஷார மஹேஷ் பண்டார (வயது 41) மற்றும் அவரது நண்பரான கசுன் புஷ்பகுமார (38) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இஷார மகேஷ் பண்டார – குருநாகல் ரத்கலை விசேட அதிரடிப்படை முகாமில் கடமையாற்றி வந்தார்.

மோட்டார் சைக்கிளில் வந்த தாக்குதல்காரர்கள், மேற்படி இருவரையும் வாள்களால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்