முன்னாள் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டுக் கொலை: ஆப்கானில்தானில் சம்பவம்

🕔 January 16, 2023

ப்கானிஸ்தானின் முன்னாள் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் காபூலில் உள்ள அவரது வீட்டில் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகளால் கொல்லப்பட்டுள்ளதாக காபூல் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை நடந்த தாக்குதலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முர்சல் நபிசாதாவும் அவரது காவலரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதேவேளை அவரின் சகோதரர் காயமடைந்துள்ளார்.

“குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க பாதுகாப்புப் படையினர் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர்” என்று பொலிஸார் தெரிவித்திருக்கிறார்கள்.

2021 இல் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளிநாட்டுப் படைகள் பின்வாங்கி நிலையில், பல அரசியல்வாதிகள் நாட்டை விட்டு வெளியேறினர். இதேவேளை தலிபான்கள் ஆட்சியைப் பொறுப்பேற்கும் வரை நபிசாதா நாடாளுமன்ற உறுப்பினராகவே இருந்தார்.

காபூலை பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக 2018 இல் நாடாளுமன்றத்தின் கீழ் சபை உறுப்பினராக நபிசாதா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தாங்கள் நாட்டைப் பாதுகாப்பதிலும், ஆப்கானை விட்டு வெளியேறியவர்கள் திரும்ப வருவதை ஊக்குவிப்பதிலும் கவனம் செலுத்துவதாக தலிபான்கள் கூறியுள்ளனர். ஆனால் சமீபத்திய மாதங்களில் பல தாக்குதல்கள் நடந்துள்ளன. இதில் கடந்த வாரம் வெளியுறவு அமைச்சு உட்பட பல தாக்குதல்களில் பொதுமக்கள் கொல்லப்பட்டதோடு, காயமடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.

டிசம்பரில், 1990களில் ஆப்கானிஸ்தானின் பிரதம மந்திரியாக இருந்த குல்புதீன் ஹெக்மத்யார் – தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்