‘மசாஜ்’ தொடர்பில் புதிய சட்டம் வரவுள்ளதாக வெளிவந்த செய்திக்கு மறுப்பு

🕔 January 17, 2023

சாஜ் நிலையங்களில் ஆணுக்கு – ஆணும், பெண்ணுக்கு பெண்ணும் மட்டுமே மசாஜ் செய்யும் வகையில் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக வெளியான செய்திகளில் உண்மை கிடையாது என, ஆயுர்வேத திணைக்களம் மறுப்புத் தெரிவித்துள்ளது.

ஆணுக்கு ஆணும், பெண்ணுக்கு பெண்ணும் மட்டுமே மசாஜ் செய்ய அனுமதிக்கும் வகையில், புதிய சட்டமொன்று கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை ஆயுர்வேத திணைக்களம் மேற்கொண்டு வருவதாக, ‘அருண’ பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது.

இந்த நிலையில் குறித்த செய்தியை ஆயுர்வேத திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் பேராசிரியர் எம்.டி.ஜே. அபேகுணவர்த்தன மறுத்துள்ளார்.

குறித்த செய்தியில் தன்மை மேற்கோள் காட்டியுள்ளமை பொய்யானது எனத் தெரிவித்துள்ள அவர், ஆயுர்வேத திணைக்களம் தனது விதிமுறைகளை வலுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள வேளையில், இவ்வாறான பொய்யான செய்திகள் வெளியிடப்படுவது வருத்தமளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தொடர்பான செய்தி: ஆணுக்கு பெண்ணும், பெண்ணுக்கு ஆணும், இனி பண்ண முடியாது: மசாஜ் நிலையங்களுக்கு வருகிறது புதிய சட்டம்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்