நீல் டி அல்விஸ் கடமைகளைப் பொறுப்பேற்றார்

நீல் டி அல்விஸ் கடமைகளைப் பொறுப்பேற்றார் 0

🕔4.Aug 2016

உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள நீல் டி அல்விஸ், இன்று வியாழக்கிழமை, தனது கடமையைப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளராகக் கடமையாற்றி வந்த, ஜே.ஜே. ரத்னசிறி – பொது நிர்வாக அமைச்சுக்கு இடமாற்றப்பட்டமை காரணமாக, அந்த இடத்துக்கு நீல் டி அல்விஸ் நியமிக்கப்பட்டுள்ளார். நீல் டி அல்விஸ் – அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபராகவும் கடமையாற்றியிருந்தார்.

மேலும்...
பரீட்சை உதவி மேற்பார்வையாளர், கடமை நேரத்தில் மரணம்

பரீட்சை உதவி மேற்பார்வையாளர், கடமை நேரத்தில் மரணம் 0

🕔4.Aug 2016

– க. கிஷாந்தன் – நடைபெற்று வரும் உயர்தரப் பரீட்சைகளின் உதவி மேற்பார்வையாளர் ஒருவர், பண்டாரவளை பகுதியில் இன்று வியாழக்கிழமை காலை திடீரென உயிரிழந்தார். மாரடைப்புக் காரணமாகவே இவர் உயிரிழந்ததாகத் தெரியவருகிறது. இவருக்கு 52 வயதாகிறது. பண்டாரவளை புனித ஜோசப் வித்தியாலயத்தில் பரீட்சைக் கடமையில் இருந்தபோதே, மேற்படி உதவி மேற்பார்வையாளர் உயிரிழந்துள்ளார். சடலம் பண்டாரவளை வைத்தியசாலையின் பிரேத அறையில்

மேலும்...
போக்குவரத்து அதிகார சபையின், அம்பாறை மாவட்ட முகாமையாளர் தொடர்பில் முறைப்பாடு

போக்குவரத்து அதிகார சபையின், அம்பாறை மாவட்ட முகாமையாளர் தொடர்பில் முறைப்பாடு 0

🕔4.Aug 2016

– றிசாத் ஏ காதர் – கிழக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் அம்பாறை மாவட்ட முகாமையாளர் நியமனம் தொடர்பில், கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயலாளருக்கு தென்கிழக்கு தனியார் போக்குவரத்து உரிமையாளர்களின் சங்கம் – கடிதம் மூலம் முறைப்பாடு செய்துள்ளது. ஊழலோடு தொடர்புபட்ட – தகுதி குறைந்த ஒருவர், குறித்த பதவிக்கு நியமனம்

மேலும்...
ஹசனலியின் அதிகாரங்களை வழங்க ஹக்கீம் இணக்கம்; சந்திக்கவும் ஏற்பாடு: தூது சென்றார் ஹாபிஸ் நசீர்

ஹசனலியின் அதிகாரங்களை வழங்க ஹக்கீம் இணக்கம்; சந்திக்கவும் ஏற்பாடு: தூது சென்றார் ஹாபிஸ் நசீர் 0

🕔4.Aug 2016

– அஹமட் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் செயலாளர் எம்.ரி. ஹசனலியிடமிருந்து பறித்தெடுக்கப்பட்ட அதிகாரங்கள் அனைத்தினையும் மீளவும் கையளிப்பதற்கு, மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் இணங்கியுள்ளார் எனத் தெரியவருகிறது. மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் சார்பில், செயலாளர் ஹசனலியை அண்மையில் சந்தித்த கிழக்கு மாகாண முதலமைச்சரும், மு.கா.வின் பிரதித் தலைவர்களில் ஒருவருமான ஹாபிஸ் நசீர் அஹமட்,

மேலும்...
மஹிந்த, ரணிலுக்கிடையில் ‘டீல்’ உள்ளது; ஆதாரங்களை அம்பலப்படுத்தினார் ஜே.வி.பி. தலைவர்

மஹிந்த, ரணிலுக்கிடையில் ‘டீல்’ உள்ளது; ஆதாரங்களை அம்பலப்படுத்தினார் ஜே.வி.பி. தலைவர் 0

🕔4.Aug 2016

மஹிந்­த ­ரா­ஜபக்ஷவுக்கும் ரணில் விக்­கி­ர­ம ­சிங்­க­வுக்கும் இடையில் ‘டீல்’ உள்­ளது என்று, மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலைவர் அனு­ர­கு­மார திஸா­நா­யக தெரிவித்தார். தன்மீதான குற்­றச்­சாட்­டுக்­களிலிருந்து, தன்னைக் பாது­காத்­துக்­கொள்ள மஹிந்த ராஜபக்ஷவுக்கு ரணில் தேவைப்­ப­டு­கின்றார். அதேபோல், ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­ கட்சியை இரண்­டாக்கி, குழப்­பத்தை ஏற்­ப­டுத்த ரணி­லுக்கும் மஹிந்த அணி­ தேவைப்ப­டுகிறது என்றும் அனுரகுமார திஸாநாயக கூறினார். மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலைமை அலு­வ­ல­கத்தில்,

மேலும்...
பேச்சுவார்த்தை தோல்வி; தொடர்கிறது பணிப் பகிஸ்கரிப்பு

பேச்சுவார்த்தை தோல்வி; தொடர்கிறது பணிப் பகிஸ்கரிப்பு 0

🕔4.Aug 2016

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கும்,  பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வரும், அனைத்துப் பல்கலைக்கழக கல்விசார ஊழியர்கள் சங்க சம்மேளனத்துக்கும் இடையில், நேற்று புதன்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து, பணிப் பகிஸ்கரிப்பு தொடரும் எனக் கூறப்படுகிறது. பல கோரிக்கைகளை முன்வைத்து, பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டமொன்றினை முன்னெடுத்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்றைய

மேலும்...
தேவை 234 பேர், உள்ளோர் 140 பேர்; வெருகல் பிரதேச ஆசிரியர்கள் நிலைவரம் குறித்து தகவல்

தேவை 234 பேர், உள்ளோர் 140 பேர்; வெருகல் பிரதேச ஆசிரியர்கள் நிலைவரம் குறித்து தகவல் 0

🕔4.Aug 2016

– எப். முபாரக் – திருகோணமலை, வெருகல் பிரதேசத்தில் 234 ஆசிரியர்கள் தேவையான நிலையில், 140 ஆசிரியர்களே  கடமையாற்றுவதாக அப்பிரதேச செயலாளர் எம். தயாபரன் தெரிவித்தார். புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான கருத்தரங்கு, ஈச்சிலம்பற்று திருவள்ளுவர் வித்தியாலயத்தில்  நேற்று புதன்கிழமை நடைபெற்றபோதே, அவர் இதனைக் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்; “கடந்த யுத்த காலத்தின்போது வெருகல்

மேலும்...
வைத்தியசாலைகளில் மருந்துகளுக்குத் தட்டுப்பாடு; நோயாளிகள் அவதி

வைத்தியசாலைகளில் மருந்துகளுக்குத் தட்டுப்பாடு; நோயாளிகள் அவதி 0

🕔3.Aug 2016

– க. கிஷாந்தன் – நுவரெலியா மாவட்டத்திலுள்ள அக்கரப்பத்தனை, லிந்துலை மற்றும் டயகம உள்ளிட்ட பிரதேச வைத்தியசாலைகளில் கணிசமான மருந்துகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதால், வைத்தியசாலைக்கு செல்லும் நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். மேற்படி வைத்தியசாலைகளுக்கு வருகின்ற நோயாளர்களில் அதிகமானோர் தோட்டப்பகுதிகளைச் சேர்ந்தோர் என்பதால், அதிகாலை கிளம்பி வைத்தியசாலைகளுக்கு வருகின்றனர். இந்த நிலையில், பல மணி நேரம் இவர்கள் வைத்திய பரிசோதனைக்காக

மேலும்...
சுஹதாக்கள் தினத்தை நினைவுகூரும் வகையில், இரத்த தான நிகழ்வு

சுஹதாக்கள் தினத்தை நினைவுகூரும் வகையில், இரத்த தான நிகழ்வு 0

🕔3.Aug 2016

– பழுலுல்லாஹ் பர்ஹான் – காத்தான்குடியிலுள்ள இரண்டு பள்ளிவாயல்களில் தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 103 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட 26வது ஆண்டு ‘ஷூஹதாக்கள் தின’ நினைவாக, இரத்த தானம் வழங்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை காத்தான்குடி ஹூஸைனியா சிறுவர் கல்லூரியில் இடம்பெற்றது. ‘உதிரம் கொடுத்து உயிர் காப்போம்’  எனும் தொனிப் பொருளில் நடத்தப்பட்ட இந்த இரத்த தான நிகழ்வினை, காத்தான்குடி

மேலும்...
தொடரும் பணிப் பகிஸ்கரிப்பு; தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இன்றும் போராட்டம்

தொடரும் பணிப் பகிஸ்கரிப்பு; தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இன்றும் போராட்டம் 0

🕔3.Aug 2016

– எம்.வை. அமீர் –  தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கல்விசாரா ஊழியர்களின் பணிப் பகிஸ்கரிப்பு போராட்டம் இன்று புதன்கிழமையும் இடம்பெற்றது. பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அனைத்துப் பல்கலைக்கழக கல்விசார உழியர்கள் சங்க சம்மேளனம், கடந்த மாதம் 27 ஆம் திகதி முதல், தொடர் பணிப் பகிஸ்கரிப்பினை மேற்கொண்டு வருகின்றது. இதன் காரணமாக, பல்கலைக்கழகங்களும் உயர் கல்வி நிறுவனங்களும்

மேலும்...
வீதியில் நின்று கொண்டு, போதையில் திட்டியவருக்கு தண்டம்

வீதியில் நின்று கொண்டு, போதையில் திட்டியவருக்கு தண்டம் 0

🕔3.Aug 2016

எப். முபாரக் வீதியால் சென்றவர்களை, போதையில் மோசமாகத் திட்டிய நபரொருவருக்கு 06 ஆயிரம் ரூபாவினை தண்டமாக விதித்து, கந்தளாய் நீதவான் நீதிமன்றம் இன்று செவ்வாய்கிழமை உத்தரவிட்டது. கந்தளாயில் சாராயம் குடித்து விட்டு, வீதியால் சென்றவர்களை மோசமாக் திட்டிய ஒருவருக்கே இவ்வாறு தண்டம் விதிக்கப்பட்டது. மேற்படி குற்றத்தினைப் புரிந்த கந்தளாய் பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய ஒருவர்,

மேலும்...
மாலையிட்டு என்னை வரவேற்க வேண்டாம்: ஷிப்லி பாறூக் அறிவிப்பு

மாலையிட்டு என்னை வரவேற்க வேண்டாம்: ஷிப்லி பாறூக் அறிவிப்பு 0

🕔3.Aug 2016

ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட் மாலை அணிவித்து, தன்னை வரவேற்கக் கூடாது என்று – கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் தெரிவித்துள்ளார். உலமாக்களின் வழிகாட்டலின் பிரகாரமும், அவர்களின் மார்க்க அறிவுறுத்தல்களுக்கு அமைவாகவும், தான் – இந்த முடிவுக்கு வந்துள்ளதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார். தன்னுடைய பேஸ்புக் பக்கத்திலேயே இந்த அறிவிப்பை ஷிப்லி பாறூக் விடுத்திருக்கின்றார். எனவே,

மேலும்...
மென் பானங்களில் அடங்கியுள்ள சீனியின் அளவைத் தெரியப்படுத்தும் திட்டம் ஆரம்பம்

மென் பானங்களில் அடங்கியுள்ள சீனியின் அளவைத் தெரியப்படுத்தும் திட்டம் ஆரம்பம் 0

🕔2.Aug 2016

மென் பானங்களில் அடங்கியுள்ள சீனியின் அளவினை தெரியப்படுத்தும் வகையில், அவை அடைக்கப்பட்டுள்ள போத்தல்களின் மூடிகளுக்கு நிறமூட்டும் நடவடிக்கை இன்று செவ்வாய்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவின் அறிவுறுத்தலுக்கு அமைய 1980 ஆண்டின் 26 ஆம் இலக்க உணவு சட்டத்தின் பிரகாரம் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவித்தல் சுகாதார

மேலும்...
தகவலறியும் சட்டமூலத்தில், சபாநாயகர் கையெழுத்திட்டார்; ஊடகத்துறை அமைச்சர்

தகவலறியும் சட்டமூலத்தில், சபாநாயகர் கையெழுத்திட்டார்; ஊடகத்துறை அமைச்சர் 0

🕔2.Aug 2016

தகவலறியும் சட்ட மூலத்தில் சபாநாயகர் கரு ஜயசூரிய கையொப்பமிட்டுள்ளார் என நாடாளுமன்ற விவகார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார். அமைச்சரவைத்  தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு, இன்று கொழும்பில் நடைபெற்றது. இதன்போதே அவர் இதனைத் தெரிவித்தார். இந்த ஊடகவியலாளர் சந்திப்பில், குறித்த சட்ட மூலத்துக்கு என்னானது என, பத்திரிகையாளரொருவர் அமைச்சரிடம் கேட்டபோதே, இந்தத் தகவலை

மேலும்...
பசில் ராஜபக்ஷ; தொடர்ந்தும் ‘உள்ளே’

பசில் ராஜபக்ஷ; தொடர்ந்தும் ‘உள்ளே’ 0

🕔1.Aug 2016

முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ஷவை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு, கடுவெல நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பசில் ராஜபக்ஷ – இன்று திங்கட்கிழமை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது, அவரை எதிர்வரும் 08 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் தம்மிக ஹேமபால உத்தரவிட்டார். திவிநெகும அபிவிருத்தி நிதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடி தொடர்பில்,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்