பரீட்சை உதவி மேற்பார்வையாளர், கடமை நேரத்தில் மரணம்

🕔 August 4, 2016

Heart attack - 097– க. கிஷாந்தன் –

டைபெற்று வரும் உயர்தரப் பரீட்சைகளின் உதவி மேற்பார்வையாளர் ஒருவர், பண்டாரவளை பகுதியில் இன்று வியாழக்கிழமை காலை திடீரென உயிரிழந்தார்.

மாரடைப்புக் காரணமாகவே இவர் உயிரிழந்ததாகத் தெரியவருகிறது. இவருக்கு 52 வயதாகிறது.

பண்டாரவளை புனித ஜோசப் வித்தியாலயத்தில் பரீட்சைக் கடமையில் இருந்தபோதே, மேற்படி உதவி மேற்பார்வையாளர் உயிரிழந்துள்ளார்.

சடலம் பண்டாரவளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், பிரேத பரிசோதனைகளின் பின்னர், உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் எனவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவத்தினால், மாணவர்களின் பரீட்சைகளுக்கு எவ்வித தடைகளும் ஏற்படவில்லை என்றும், பரீட்சைகளின் மேலதிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்