போக்குவரத்து அதிகார சபையின், அம்பாறை மாவட்ட முகாமையாளர் தொடர்பில் முறைப்பாடு

🕔 August 4, 2016

Bus - 012– றிசாத் ஏ காதர் –

கிழக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் அம்பாறை மாவட்ட முகாமையாளர் நியமனம் தொடர்பில், கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயலாளருக்கு தென்கிழக்கு தனியார் போக்குவரத்து உரிமையாளர்களின் சங்கம் – கடிதம் மூலம் முறைப்பாடு செய்துள்ளது.

ஊழலோடு தொடர்புபட்ட – தகுதி குறைந்த ஒருவர், குறித்த பதவிக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும், இவர் இந்தப் பதவியில் நீடித்தால், தாம் – பணிப் பகிஸ்கரிப்பில்; ஈடுபடப் போவதாகவும் குறித்த முறைப்பாட்டில், மேற்படி சங்கம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு தனியார் போக்குவரத்து உரிமையாளர்கள் சங்கத்தின் அங்கத்தவர்கள் கையொப்பமிட்டு அனுப்பி வைத்துள்ள மேற்படி கடிதத்தின் பிரதிகள் ஜனாதிபதி, பிரதம மந்திரி, கிழக்கு மாகாண ஆளுநர், கிழக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் உள்ளிட்டோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

கிழக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் அம்பாறை மாவட்ட முகாமையாளராக ஏற்கனவே பணியாற்றி வந்தவர், கடந்த வருடம் நொவம்பர் மாதமளவில், சிலரின் விருப்பு வெறுப்புகளுக்கிணங்க திருகோணமலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டதாகவும், இதனையடுத்து குறித்த இடத்துக்கு தற்போதைய நபர் நியமிக்கப்பட்டார் எனவும் மேற்படி முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மேற்படி இடமாற்றம் தொடர்பாக மேலதிகாரிகளை தாம் வினவியபோது, அது – தற்காலிமான ஒரு இடமாற்றம் என்றும், ஒரு மாதத்தின் பின்னர் முன்பு கடமையாற்றியவர் அம்பாறை மாவட்ட முகாமையாளராக மீண்டும் நியமிக்கப்படுவார் எனவும், தமக்கு வாக்குறுதி வழங்கப்பட்டதாக முறைப்பாட்டாளர்கள் தமது கடிதத்தில் தெரிவித்துள்ளனர். ஆயினும், அந்த வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

திருகோணமலையிலுள்ள கிழக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைமைக் காரியாலயத்தில் நேரசூரி அலுவலராகக் கடமையாற்றிய நபரே, தற்போது அம்பாறை மாவட்ட முகாமையாளராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், சில பஸ் உரிமையாளர்கள், தாம் அனுமதி பெற்றுக் கொள்ளாத பாதைகளில், போக்குவரத்துச் சேவைகளில் ஈடுபடுவதாகவும், இதனைக் கண்டுகொள்ளாமலிருக்கும் பொருட்டு, கிழக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின், அம்பாறை மாவட்ட முகாமையாளர் லஞ்சம் பெற்று வருவதாகவும், தென்கிழக்கு தனியார் போக்குவரத்து உரிமையாளர்களின் சங்கம் – தமது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளது.

அதேபோன்று, குறித்த சிலநபர்களுக்குத் தேவையான வகையில், போக்குவரத்தில் ஈடுபடுவதற்கான பாதை அனுமதியினை வழங்கும் பொருட்டு, மேற்படி அம்பாறை மாவட்ட முகாமையாளர் லஞ்சம் பெற்றுள்ளார் எனவும் அந்த முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளது.

எனவே, கிழக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின், அம்பாறை மாவட்ட முகாமையாளராக தற்போது கடமையாற்றும் நபரை அந்தப் பதவியிலிருந்து விலக்கி விட்டு, முன்பு கடமையாற்றிய நபரை குறித்த பதவிக்கு நியமிக்குமாறும் தென்கிழக்கு தனியார் போக்குவரத்து உரிமையாளர்களின் சங்கம் தமது கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளது.

ழக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் அம்பாறை மாவட்ட முகாமையாளர் நியமனம் தொடர்பில், கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயலாளருக்கு தென்கிழக்கு தனியார் போக்குவரத்து உரிமையாளர்களின் சங்கம் – கடிதம் மூலம் முறைப்பாடு செய்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்