வீதியில் நின்று கொண்டு, போதையில் திட்டியவருக்கு தண்டம்

🕔 August 3, 2016

Drunker - 013எப். முபாரக்

வீதியால் சென்றவர்களை, போதையில் மோசமாகத் திட்டிய நபரொருவருக்கு 06 ஆயிரம் ரூபாவினை தண்டமாக விதித்து, கந்தளாய் நீதவான் நீதிமன்றம் இன்று செவ்வாய்கிழமை உத்தரவிட்டது.

கந்தளாயில் சாராயம் குடித்து விட்டு, வீதியால் சென்றவர்களை மோசமாக் திட்டிய ஒருவருக்கே இவ்வாறு தண்டம் விதிக்கப்பட்டது.

மேற்படி குற்றத்தினைப் புரிந்த கந்தளாய் பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய ஒருவர், இன்று நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டபோது, நீதிவான் எச்.ஜி.தம்மிக்க  குறித்த தண்டத்தினை விதித்து உத்தரவிட்டார்.  

பொலிஸாருக்குக் கிடைத்த அவசர தொலைபேசி தகவலின் அடிப்படையில்,  இந்த நபரை இன்றைய தினம் பொலிஸார் கைது செய்திருந்தனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்