தொடரும் பணிப் பகிஸ்கரிப்பு; தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இன்றும் போராட்டம்

🕔 August 3, 2016

Strike - SEUSL - 02
– எம்.வை. அமீர் – 

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கல்விசாரா ஊழியர்களின் பணிப் பகிஸ்கரிப்பு போராட்டம் இன்று புதன்கிழமையும் இடம்பெற்றது.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அனைத்துப் பல்கலைக்கழக கல்விசார உழியர்கள் சங்க சம்மேளனம், கடந்த மாதம் 27 ஆம் திகதி முதல், தொடர் பணிப் பகிஸ்கரிப்பினை மேற்கொண்டு வருகின்றது. இதன் காரணமாக, பல்கலைக்கழகங்களும் உயர் கல்வி நிறுவனங்களும் ஸ்தம்பிதமடைந்துள்ளன.

இந்த நிலையில் இன்றைய தினமும் போராட்டங்கள் தொடர்ந்தவண்ணமுள்ளன.

தென்கிழக்குப் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் போராட்டம், அப் பல்கலைக்கழகத்தின் சம்மாந்துறையில் அமைந்துள்ள பிரயோக விஞ்ஞான பீடத்தின் முன்பாக இடம்பெற்றது.

அந்த பல்கலைக்கழகத்தின் கல்விசாரா ஊழியர் சங்கத்தின் தலைவர் வை. முபாறக், இந்தப் போராட்டத்துக்குத் தலைமை தாங்கினார்.

இதன்போது, தமது கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு – ஊழியர்கள் வீதியில் இறங்கி, தங்களது கோரிக்கைகளை அரசு நிறைவேற்றித் தரவேண்டும் என கோஷமிட்டவாறு வலம்வந்தனர்.Strike - SEUSL - 03 Strike - SEUSL - 01

Comments

புதிது பேஸ்புக் பக்கம்