நளொன்றுக்கு 658 கருக்கலைப்புகள்; இலங்கையின்தான்

நளொன்றுக்கு 658 கருக்கலைப்புகள்; இலங்கையின்தான் 0

🕔9.May 2016

நாட்டில் தினமும் 658 கரு கலைப்புக்கள் இடம்பெறுவதாக களனி பல்கலைக்கழகத்தின் சமூக அறிவியல் பிரிவு பேராசிரியர் கே. கருணாதிலக்க வெளியிட்டுள்ளார். ‘கருக்கலைப்பு சட்டபூர்வமாக்குதல் வேண்டுமா’ எனும் தலைப்பில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார். ஆண்டு தோறும் 02 இலட்சத்து 40 ஆயிரத்து 170 சட்ட விரோத கருக் கலைப்புக்கள்

மேலும்...
போதையில் பாடசாலை மாணவர்களை ஏற்றிக் கொண்டு வேன் ஓட்டியவர் கைது

போதையில் பாடசாலை மாணவர்களை ஏற்றிக் கொண்டு வேன் ஓட்டியவர் கைது 0

🕔9.May 2016

மதுபானம் அருந்திய நிலையில் பாடசாலை மாணவர்களை ஏற்றிக் கொண்டு வேன் ஒன்றினை செலுத்திய சாரதியை, பொலிஸார் பிலியந்தலயில் வைத்து கைது செய்துள்ளனர். சாரதி மது அருந்திய நிலையில் குறித்த வாகனத்தினைச் செலுத்திய போது, அதனுள் 15 மாணவர்கள் இருந்துள்ளனர். 40 வயதான சாரதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். பாடசாலையின் முன்பாக கடமையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்துப் பொலிஸ் உத்தியோகத்தர்,

மேலும்...
எனது பிரச்சினையை பேசுவதற்கு முன்னர், இடை நிறுத்தப்பட்டுள்ள மௌலவிகளை இணையுங்கள்: ஹசனலி

எனது பிரச்சினையை பேசுவதற்கு முன்னர், இடை நிறுத்தப்பட்டுள்ள மௌலவிகளை இணையுங்கள்: ஹசனலி 0

🕔9.May 2016

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் உள்­ளக முரண்­பா­டு­களைப்  பேச்­சு­வார்த்­தைகளின் ஊடாகத் தீர்ப்­ப­தற்கு முன்னதாக, கட்­சி­யி­லி­ருந்து இடை நிறுத்தி வைக்­கப்­பட்­டுள்ள அர­சியல் உயர்­பீட உறுப்­பி­னர்கள்  இரு­வ­ரையும் மீண்டும் கட்சியின் அர­சியல் உயர்பீடத்துக்குள் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று கட்சியின் செயலாளர் எம்.ரி. ஹசனலி தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கையின் பிறகு, தனது பிரச்­சினை தொடர்­பாக பேச்­சு­வார்த்­தையில் ஈடுபட முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும்...
முன்னாள் பொலிஸ் மா அதிபர் வீட்டில் கொள்ளை; மனைவியின் தலையணையின் கீழிருந்த நகைகளும் அபேஸ்

முன்னாள் பொலிஸ் மா அதிபர் வீட்டில் கொள்ளை; மனைவியின் தலையணையின் கீழிருந்த நகைகளும் அபேஸ் 0

🕔9.May 2016

முன்னாள் பொலிஸ் மா அதிபர் விக்டர் பெரேராவின் பாணந்துறை வீட்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு கொள்ளைச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. சுமார் 10 லட்சம் ரூபாய் பெறுமதியான பணம் மற்றும் தங்க நகைகள் இதன்போது கொள்ளையிடப்பட்டுள்ளன. வீட்டின் முன் நுழைவாயில் பகுதியில்ட பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் கடமையில் இருந்த போதும், திருடர்கள் மற்றொரு வாயிற் பகுதி ஊடாக, குறித்த வீட்டின் உள்ளே

மேலும்...
ஏறாவூர் ‘பிரதேச   ஒருங்கிணைப்புக் குழு’ இணைத் தலைவராக சுபையிர் நியமனம்

ஏறாவூர் ‘பிரதேச ஒருங்கிணைப்புக் குழு’ இணைத் தலைவராக சுபையிர் நியமனம் 0

🕔9.May 2016

– ஏ.எல்.  றியாஸ் – ஏறாவூர் நகர ‘பிரதேச   ஒருங்கிணைப்புக் குழு’வின் இணைத்தலைவராக கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரும் தற்போதைய மாகாண  சபை உருப்பினருமான எம்.எஸ்  சுபையிர் ஜனாதிபதியினால்  நியமிக்கப்பட்டுள்ளார்.இவருக்கான நியமனக் கடிதத்தினை ராஜாங்க அமைச்சர் எம் .எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் இன்று திங்கட்கிழமை தனது அமைச்சில் வைத்து கையளித்தார்.கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சுபையிர்

மேலும்...
நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ளாத உறுப்பினர்களுக்கு எதிராக வழக்கு

நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ளாத உறுப்பினர்களுக்கு எதிராக வழக்கு 0

🕔9.May 2016

நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ளாத உறுப்பினர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாகத் தெரியவருகிறது. இதற்கான நடவடிக்கைகளை சிவில் சமூக அமைப்புக்கள் மேற்கொண்டு வருகின்றன. இது தொடர்பில் சிவில் சமூக அமைப்புக்கள் கலந்துரையாடல்களை நடத்தி வருவதாக அமைப்புக்களின் அழைப்பாளர் பேராசிரியர் சரத் வீரசூரிய தெரிவித்துள்ளார் கடந்த வியாழக்கிழமையன்று அரசாங்கத்தின் பிரேரணை ஒன்றின் வாக்கெடுப்பின்போது, ஆளும் கட்சி உறுப்பினர்களின் வரவின்மையால்

மேலும்...
பாடசாலை மதில் சுவர் இடிந்து விழுந்ததில் பாதிக்கப்பட்ட 16 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

பாடசாலை மதில் சுவர் இடிந்து விழுந்ததில் பாதிக்கப்பட்ட 16 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி 0

🕔9.May 2016

– க. கிஷாந்தன் – பதுளை – லுணுகல அல் அமீன் முஸ்லிம் வித்தியாலத்தின் மதில் சுவர் இடிந்து விழுந்ததில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் 16 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக லுணுகல பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றது. பாடசாலையில் மேலதிக வகுப்புக்கு வந்திருந்த மாணவர்களே இந்த அனர்த்தத்தில் சிக்கியுள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவர்களில் நால்வர்,

மேலும்...
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் ஏற்பாட்டில், ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் ஏற்பாட்டில், ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு 0

🕔9.May 2016

– பி. முஹாஜிரீன் –‘ஊடகத்துறை சட்டங்களும் ஊடக ஒழுக்கவியலும்’ எனும் தொனிப்பொருளிலான ஒரு நாள் பயிற்சிச் செயலமர்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை சாய்ந்தமருது பரடைஸ் மண்டபத்தில் நடைபெற்றது.அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் ஏற்பாட்டில் இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவினால் நடத்தப்பட்ட இந்த பயிற்சி செயலமர்வுக்கு அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.ஏ. பகுர்தீன் தலைமை தாங்கினார்.இந்நிகழ்வில் சட்ட

மேலும்...
மஹிந்த தரப்பு சு.கட்சி எம்.பி.கள் மைத்திரியுடன் சமரசம்; விமலின் கூட்டத்தையும் புறக்கணிப்பு

மஹிந்த தரப்பு சு.கட்சி எம்.பி.கள் மைத்திரியுடன் சமரசம்; விமலின் கூட்டத்தையும் புறக்கணிப்பு 0

🕔9.May 2016

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதி மைத்திரி தரப்பினருடன் சமரசப் பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது. இது தொடர்பான சந்திப்புக்கள் தனிப்பட்ட ரீதியிலேயே இடம்பெறுவதாகவும் உத்தியோகபூர்வ சந்திப்புக்கள் எவையும் இடம்பெறவில்லை என்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் செயலாளர் அமரவீர தெரிவித்துள்ளார். கடந்த மேதினத்தின் போது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியைச் சேர்ந்த சுமார் 40 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மஹிந்த

மேலும்...
சீசெல்ஸில் மஹிந்த ஆரம்பித்த திட்டங்கள் தோல்வி

சீசெல்ஸில் மஹிந்த ஆரம்பித்த திட்டங்கள் தோல்வி 0

🕔8.May 2016

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ – சீசெல்ஸ் நாட்டில் ஆரம்பித்த திட்டங்கள் தற்போது மூடப்படும் நிலைக்கு உள்ளாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மஹிந்த ராஜபக்சவினால் 2014ஆம் ஆண்டு ஜூனில் சீசெல்ஸில் இலங்கை வங்கி, ஸ்ரீலங்கா காப்புறுதி, மிஹின் எயார் மற்றும் நவலோக்க வைத்தியசாலை ஆகியவற்றின் கிளைகள் திறக்கப்பட்டன. இதில் ஸ்ரீலங்கா காப்புறுதியின் செயற்பாடுகள் இரண்டு மாதத்தில் செயலிக்க செய்யப்படவுள்ளன.

மேலும்...
அன்று இரவு நடந்தவற்றை நினைவு கூருங்கள்; மு.கா. தவிசாளர் பஷீர், உச்சபீட உறுப்பினர்களுக்கு மடல்

அன்று இரவு நடந்தவற்றை நினைவு கூருங்கள்; மு.கா. தவிசாளர் பஷீர், உச்சபீட உறுப்பினர்களுக்கு மடல் 0

🕔7.May 2016

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம். அனைத்து உச்சபீட உறுப்பினர்களுக்கும், அஸ்ஸலாமு அலைக்கும். நமது கட்சியின் கடந்த 15 வருட கால வரலாற்றை, இவ்வரலாற்றின் வழி நெடுகிலும் தலைவர் ரவூப் ஹக்கீம் உட்பட இவ்வுச்ச பீட உறுப்பினர்களில் அநேகருடன் கைகோர்த்து நடந்து வந்தவன் என்ற வகையில் நான் உட்பட நம் அனைவருக்கும் இவ்வரலாற்றுப் பதிவுகளை மீள் நினைவுறுத்த கடமைப்பட்டுள்ளேன்.

மேலும்...
உகண்டா செல்வதற்கான யோசிதவின் கோரிக்கை நிராகரிப்பு

உகண்டா செல்வதற்கான யோசிதவின் கோரிக்கை நிராகரிப்பு 0

🕔7.May 2016

யோஷித ராஜ­பக்ஷ – உகண்­டா­வுக்கு விஜ­யம் மேற்கொள்வதற்கு அனுமதி வழங்குமாறு விடுத்த வேண்டுகோளை கடுவலை நீதவான் நீதி­மன்றம் நிராகரித்துள்­ளது. உகண்­டா புதிய ஜனா­தி­ப­தியின் பத­வி­யேற்பு நிகழ்வில், தனது தந்­தை­ மஹிந்த ராஜபக்ஷவுடன் கலந்து கொள்ளவுள்ளதாகவும், அவருடன் உகண்டா செல்வதற்கான அனு­மதியினை வழங்­கு­மாறும் கோரி, யோஷிதவின் சட்டத்தரணிகள் மனுத்தாக்கல் செய்தனர். இந்த நிலையில், மேற்படி மனுவை நிரா­க­ரித்த

மேலும்...
முஸ்லிம்களின் பிரதிநிதித்துவங்களை புதிய அரசமைப்பு பாதுகாக்க வேண்டும்: அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்

முஸ்லிம்களின் பிரதிநிதித்துவங்களை புதிய அரசமைப்பு பாதுகாக்க வேண்டும்: அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் 0

🕔6.May 2016

புதிய அரசமைப்பு திருத்தம் இனங்கள், சமூகங்கள் மற்றும் மதங்களுக்கு இடையில் பிளவு – மோதலை ஏற்படுத்திவிடக் கூடாது என வலியுறுத்திய புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், ஒரு சமூகம் அனுபவித்து வரும் சலுகைகள், உரிமைகள் மற்றும் வசதிகள் என்பவற்றை இல்லாமல் செய்கின்ற ஒரு அரசமைப்பு சட்டத்தை உருவாக்குவதற்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை

மேலும்...
நாய்களைப் பதிவு செய்யத் தவறினால், 10 ஆயிரம் ரூபாய் அபராதம்: அமைச்சர் பைசர் முஸ்தபா

நாய்களைப் பதிவு செய்யத் தவறினால், 10 ஆயிரம் ரூபாய் அபராதம்: அமைச்சர் பைசர் முஸ்தபா 0

🕔6.May 2016

நாய்களை உள்ளுராட்சி சபைகளில் பதிவு செய்யாத அதன் உரிமையாளர்களுக்கு பத்தாயிரம் ரூபா அபராதம் விதிக்கப்படும் என்று  உள்ளுராட்சி மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். நாய்களை வளர்ப்போர் அவற்றினை தமது உள்ளுராட்சி மன்றங்களில் வருடாந்தம் பதிவு செய்ய வேண்டும் எனவும், அவ்வாறு செய்யத் தவறும் நாய்களின் உரிமையாளர்களுக்கு 10000 ரூபா அபராதம் விதிக்கப்படும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

மேலும்...
சரத் பொன்சேகாவை கைது செய்த சுமித் மானவடு, தலையில் மரக்குற்றி விழுந்து மரணம்

சரத் பொன்சேகாவை கைது செய்த சுமித் மானவடு, தலையில் மரக்குற்றி விழுந்து மரணம் 0

🕔6.May 2016

வீட்டுக் கூரையின் மரக்குற்றி உடைந்து தலையில் விழுந்தமை காரணமாக, பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மேஜர் ஜெனரல் சுமித் மானவடு (55 வயது) இன்று வெள்ளிக்கிழமை அதிகாலையில் உயிரிழந்ததாக ராணுப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயனத் ஜயவீர தெரிவித்தார். ராணுவப் படைப்பிரிவொன்றின் கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் சுமித் மானவடு, தலையில் ஏற்பட்ட பலத்த காயங்களுடன் கொழும்பு தேசிய

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்