உகண்டா செல்வதற்கான யோசிதவின் கோரிக்கை நிராகரிப்பு

🕔 May 7, 2016

Yositha rajapaksha - 09

யோஷித ராஜ­பக்ஷ – உகண்­டா­வுக்கு விஜ­யம் மேற்கொள்வதற்கு அனுமதி வழங்குமாறு விடுத்த வேண்டுகோளை கடுவலை நீதவான் நீதி­மன்றம் நிராகரித்துள்­ளது.

உகண்­டா புதிய ஜனா­தி­ப­தியின் பத­வி­யேற்பு நிகழ்வில், தனது தந்­தை­ மஹிந்த ராஜபக்ஷவுடன் கலந்து கொள்ளவுள்ளதாகவும், அவருடன் உகண்டா செல்வதற்கான அனு­மதியினை வழங்­கு­மாறும் கோரி, யோஷிதவின் சட்டத்தரணிகள் மனுத்தாக்கல் செய்தனர்.

இந்த நிலையில், மேற்படி மனுவை நிரா­க­ரித்த கடு­வலை நீதிவான் நீதி­மன்றம், குறித்த மனுவை மேல் நீதிமன்றில் தாக்கல் செய்­யு­மாறு அறிவுறுத்தி­யுள்­ளது.

சி.எஸ்.என். தொலைக்­காட்சி நிறு­வ­னத்தில் இடம்­பெற்ற நிதி மோசடி தொடர்பில் யோஷித ராஜ­பக் ஷ கைது செய்­யப்­பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்