போதையில் பாடசாலை மாணவர்களை ஏற்றிக் கொண்டு வேன் ஓட்டியவர் கைது

🕔 May 9, 2016

Drink and Drive - 012துபானம் அருந்திய நிலையில் பாடசாலை மாணவர்களை ஏற்றிக் கொண்டு வேன் ஒன்றினை செலுத்திய சாரதியை, பொலிஸார் பிலியந்தலயில் வைத்து கைது செய்துள்ளனர்.

சாரதி மது அருந்திய நிலையில் குறித்த வாகனத்தினைச் செலுத்திய போது, அதனுள் 15 மாணவர்கள் இருந்துள்ளனர்.

40 வயதான சாரதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பாடசாலையின் முன்பாக கடமையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்துப் பொலிஸ் உத்தியோகத்தர், வேன் உள்ளிருந்து மது வாசனையினை உணர்ந்ததை அடுத்து, சாரதி கைது செய்யப்பட்டார்.

பொலிஸாரின் காவலில் வைக்கப்பட்டுள்ள மேற்படி சாரதி, நாளை செவ்வாய்கிழமை நீதிமன்றில் ஆஜர் செய்யப்படுவார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

Comments