அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் ஏற்பாட்டில், ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு

🕔 May 9, 2016
Workshop - ADJF - 0444
– பி. முஹாஜிரீன் –

‘ஊடகத்துறை சட்டங்களும் ஊடக ஒழுக்கவியலும்’ எனும் தொனிப்பொருளிலான ஒரு நாள் பயிற்சிச் செயலமர்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை சாய்ந்தமருது பரடைஸ் மண்டபத்தில் நடைபெற்றது.

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் ஏற்பாட்டில் இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவினால் நடத்தப்பட்ட இந்த பயிற்சி செயலமர்வுக்கு அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.ஏ. பகுர்தீன் தலைமை தாங்கினார்.

இந்நிகழ்வில் சட்ட உதவி ஆணைக்குழுவின் செயற்திட்ட முகாமையாளர் நிசாந்தினி ரட்ணம், சட்ட உதவி ஆணைக்குழுவின் சிரேஷ்ட நிகழ்ச்சித்திட்ட உத்தியோகத்தர் எம்.எம்.ஏ. சுபைர், சட்ட ஆலோசகர்களான எம்.எச். ஹஸ்ஸான் றுஸ்தி, எல். குலைவாசனா, திட்ட உத்தியோகத்தர் பி.எம். கலாமுதீன்   மற்றும் பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவின் முறைப்பாட்டு அதிகாரி அமீர் ஹூஸைன் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினர்.

இச்செயலமர்வில் வளவாளர்களால் ஊடகச் சட்டங்களும் ஒழுக்கவியலும், தகவலறியும் சட்டம்,  அறிக்கையிடல் மீதான அவதூறு, புலனாய்வு அறிக்கையிடல் படைப்பாக்க எழுத்தாற்றல் போன்ற தலைப்புக்களில் விரிவுரைகள் நிகழ்த்தப்பட்டன.

இதில் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த பெருமளவான ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர்.Workshop - ADJF - 0555Workshop - ADJF - 0222Workshop - ADJF - 0333Workshop - ADJF - 0111

Comments

புதிது பேஸ்புக் பக்கம்