நாய்களைப் பதிவு செய்யத் தவறினால், 10 ஆயிரம் ரூபாய் அபராதம்: அமைச்சர் பைசர் முஸ்தபா

🕔 May 6, 2016

Faizer musthafa - 011நாய்களை உள்ளுராட்சி சபைகளில் பதிவு செய்யாத அதன் உரிமையாளர்களுக்கு பத்தாயிரம் ரூபா அபராதம் விதிக்கப்படும் என்று  உள்ளுராட்சி மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

நாய்களை வளர்ப்போர் அவற்றினை தமது உள்ளுராட்சி மன்றங்களில் வருடாந்தம் பதிவு செய்ய வேண்டும் எனவும், அவ்வாறு செய்யத் தவறும் நாய்களின் உரிமையாளர்களுக்கு 10000 ரூபா அபராதம் விதிக்கப்படும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

நேற்று வியாழக்கிழமை அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்தும் கூறுகையில்,

“தெரு நாய்களினால் மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

நாய்களைப் பதிவு செய்யாதோருககு அபராதம் விதிப்பது குறித்த யோசனைக்கு அண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

தெரு நாய்ககளின் தொல்லையை குறைக்க கொழும்பில் விசேட திட்டமொன்று முன்னெடுக்கப்பட உள்ளது.

தெரு நாய்களை கட்டுப்படுத்த விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதிலும் ஐந்து லட்சத்திற்கும் அதிகமான தெருநாய்கள் வாழ்ந்து வருகின்றன. இதனால் ஏற்படும் சிரமங்கள் தொடர்பில் நாள் தோறும் உள்ளுராட்சி மன்றங்களில் முறைப்பாடு செய்யப்படுகின்றன” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்