சீசெல்ஸில் மஹிந்த ஆரம்பித்த திட்டங்கள் தோல்வி

🕔 May 8, 2016

Mahinda - 0134முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ – சீசெல்ஸ் நாட்டில் ஆரம்பித்த திட்டங்கள் தற்போது மூடப்படும் நிலைக்கு உள்ளாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஹிந்த ராஜபக்சவினால் 2014ஆம் ஆண்டு ஜூனில் சீசெல்ஸில் இலங்கை வங்கி, ஸ்ரீலங்கா காப்புறுதி, மிஹின் எயார் மற்றும் நவலோக்க வைத்தியசாலை ஆகியவற்றின் கிளைகள் திறக்கப்பட்டன.

இதில் ஸ்ரீலங்கா காப்புறுதியின் செயற்பாடுகள் இரண்டு மாதத்தில் செயலிக்க செய்யப்படவுள்ளன. நவலோக்க வைத்தியசாலையும் இந்த மாதத்துடன் தமது செயற்பாடுகளை நிறுத்தவுள்ளது.

தற்போது அந்த வைத்தியசாலைக்கு சீசெல்ஸில் 5.2 மில்லியன் ரூபாய்கள் நட்டமேற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மிஹின்எயாரும் தமது செயற்பாடுகளை நிறுத்தவுள்ளது.

எனினும் இலங்கை வங்கியின் கிளை லாபத்துடன் செயற்பட்டு வருவதால் அதன் செயற்பாடுகளை தொடர முடியும் என்று இலங்கை வங்கியின் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்